இஸ்லாமை அறிந்து கொள்வோம்

November 13, 2005

இஸ்லாமால் பெண்ணின் நிலை உயர்ந்ததா?

இஸ்லாமால் பெண்ணின் நிலை உயர்ந்ததா?
அலி சினா

(நான் இவரது கட்டுரையில் சிலவற்றை நீக்கியிருக்கிறேன். சிலவற்றை சேர்த்திருக்கிறேன்)

பொதுவாக நம்புவது போல, அரேபியாவில் இருந்த பெண்களின் நிலையை இஸ்லாம் உயர்த்தவில்லை. உயர்த்துவதற்கு பதிலாக உண்மையிலேயே தாழ்த்தியது. இதற்கு ஏராளமான உதாரணங்கள் இருந்தபோது, கீழ்க்கண்ட ஹதிஸை ஒரு உதாரணமாக பார்க்கலாம்.

புகாரி, தொகுதி 3, புத்தகம் 43, எண் 648

அப்துல்லா பின் அப்பாஸ் கூறினார்,

அல்லா குரானில் நபியின் மனைவியரில் இருவரைப் பற்றி அல்லா குரானில் கூறியதைப் பற்றி உமரிடம் கேட்டு அறிய ஆவலாக இருந்தேன். “நீங்கள் இருவரும் நபி விரும்புவதற்கு நேர்மாறாக நடந்து கொள்ள உங்கள் இதயம் விரும்புகிறது.” என்று யாரைப் பற்றி குரானில் கூறுகிறது என்று கேட்டேன். இயற்கையின் அழைப்பின் காரணமாக அவர் வெளியே சென்றார். நானும் கூடவே ஒரு டம்ளரில் தண்ணீர் எடுத்துக்கொண்டு கூடச் சென்றேன். கழுவியபின்னர் நான் கேட்டேன், “நம்பிக்கையாளர்களில் தலையாயவரே, அல்லா “நீங்களிருவரும் நேர்வழியில் திரும்பினால்..” (66.4) என்று நபியின் மனைவியர் பற்றி அல்லா குரானில் கூறுகிறாரே அந்த இருவரும் யார் யார்? என்று கேட்டேன்.
உமர் “உன் கேள்வியைப் பார்த்து ஆச்சரியப்படுகிறேன். ஓ இபின் அப்பாஸ், அவர்கள் இருவரும் அயீஷாவும் ஹஃப்ஸாவும்” என்றார்.

மேலும் உமர் கூறும்போது, “பானி உமைய்யா பின் ஜைத் உபஜாதியைச் சார்ந்த அன்சாரி ஜாதியைச் சார்ந்த பக்கத்துவீட்டுக்காரனும் அவன் ஒருநாள் நான் ஒருநாள் என்று நபியின் வீட்டுக்குச் சென்று வருவோம். அந்த நாளில் என்ன நடந்தது என்பதை அவன் எனக்கும், என் நாளில் என்ன நடந்தது என்பதை நான் அவனுக்கும் சொல்வோம். குரேஷி ஜாதியைச் சார்ந்த நாங்கள் எங்கள் வீட்டு பெண்களை எங்களுக்குக் கீழாக நடத்தி வந்தோம். ஆனால் அன்சார் ஜாதியில் பெண்கள் ஆண்களைவிட மேலான நிலையில் இருந்தார்கள். ஆகவே எங்கள் பெண்கள் அன்சார் ஜாதி பெண்களோடு பழகி அவர்களது வழிமுறைகளை கற்றுக்கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள். ஒரு நாள் நான் என் மனைவியை கத்த அவளும் என்னை திருப்பி கத்தினாள். அவள் எனக்கு திருப்பி பேசியது எனக்கு பிடிக்கவில்லை. அதற்கு அவள் சொன்னாள், “நான் உனக்கு திருப்பி பதில் சொன்னால், நீ ஏன் தவறாக எடுத்துக்கொள்கிறாய்? அல்லாவின் பெயரால், நபியின் மனைவியர் நபியை திருப்பி பதில் சொல்லுகிறார்கள். சிலர் அவரோடு பேசாமல் ஒரு நாள் முழுவதும் இருக்கிறார்கள்.” இது எனக்கு மிகுந்த பயத்தை உண்டு பண்ணியது. ஆகவே நான் அவளிடம் சொன்னேன், “உங்களில் யார் இதைச் செய்கிறீர்களோ அவர்களுக்கு மிகுந்த நஷ்டம்” என்று சொன்னேன்.

( இது நீண்ட ஹதிஸ்.. முழுவதும் படிக்க இங்கே செல்லவும்)

நீங்கள் பார்ப்பது போலவே, குரேஷி மக்கள் பெண்களை கீழாக நடத்துவது பழக்கம் என்பதையும், மெதீனாவுக்கு வந்ததும், அன்சாரி பெண்கள் ஆண்களுக்கு சமதையாக (குரேஷி கண்களில் அது பெண்கள் மேலாகவும் ஆண்கள் கீழாகவும் தெரிந்திருக்கும்) நடத்துவதை உமர் குற்றம் சொல்கிறார் என்பதையும் பார்க்கலாம்.

மெக்கா ஒரு மத இடம். எல்லா மத இடங்களிலும் இருப்பதைப் போலவே, சாதாரண அறிவு பின்னுக்கு தள்ளப்பட்டு மதம் முன்னுக்கு தள்ளப்பட்டு அதன் விளைவாக பெண்கள் பாரபட்சம் காட்டப்படுவது நடக்கிறது. மெக்காவும் விதிவிலக்கல்ல. யூத பெண்களைவிடவும், அன்சாரி பெண்களை விடவும் குரேஷி பெண்கள் கீழான நிலையில் இருந்தது ஆச்சரியத்துக்குரியதல்ல. ஆதலாம், குரேஷி பெண்கள் அன்சாரி பெண்களை சந்தித்ததும், அன்சாரி பெண்களைப் போன்ற சுதந்திரத்தை அவர்களும் விரும்பியதில் ஆச்சரியமில்லை. ஆனால் இது மிசோஜினிஸ்டுகளான உமருக்கும் முகம்மதுவுக்கும் சந்தோஷமான விஷயமாக இல்லை.

அரபியர்கள் தங்கள் வரலாறை எழுதிவைக்கும் வழக்கம் இல்லை. இஸ்லாம் வருவதற்கு முன்னர் இருந்தவற்றை பற்றிய விஷயங்கள் மிகவும் பாரபட்சமான முறையிலேயே இஸ்லாமிய புத்தகங்களில் பதிந்து வைக்கப்பட்டுள்ளன. இஸ்லாமுக்கு முந்தைய காலம் ஜஹிலியா என்றும், அந்த காலத்தில் அரபியர்கள் எல்லோரும் காட்டுமிராண்டிகள் என்றும், தங்கள் பெண் குழந்தைகளை உயிருடன் புதைத்து வந்தார்கள் என்றும், ஒரு ஒட்டகத்தின் மதிப்பை கூட அந்த பெண்களுக்கு அரபியர் வழங்கவில்லை என்றும் முஸ்லீம் வரலாற்றாசிரியர்கள் எழுதி வந்திருக்கிறார்கள். ஆனால் இந்த ஹதீஸ் வேறொரு விஷயத்தைச் சொல்கிறது. மெக்காவைத் தவிர வேறு இடங்களில் அரபி பெண்களுக்கு நிறைய சுதந்திரம் இருந்ததையும் அவற்றை இஸ்லாம் எடுத்துஇக்கொண்டதையும் சொல்கிறது. அதைவிட முக்கியமாக, இஸ்லாமில் பெண்கள் கீழ்த்தரமாக நடத்தப்படுவதற்கு எந்த வித கடவுள் கட்டளையும் இல்லை என்பதையும் அது வெறுமனே குரேஷி ஜாதியினர் எப்படி தங்கள் பெண்களை நடத்தினார்கள் என்பதும் அது எல்லா முஸ்லீம் பெண்களுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது என்பதையுமே காட்டுகிறது. குரேஷி ஜாதியைச் சார்ந்த முகம்மது தன் பிறப்பு வளர்ப்பின் மூலம் கொண்ட பாரபட்சமான சிந்தனைகளை தான் கொடுத்த மதத்திலும் குரானிலும் விதைத்துவிட்டு சென்றிருக்கிறான் என்பதைத்தான் காட்டுகிறது.

பெண் குழந்தைகளை உயிருடன் புதைக்கும் விஷயத்தை எடுத்துக்கொள்வோம். இன்று தமிழ்நாட்டிலும் ஒரு சில இடங்களில் பெண் குழந்தையை கொல்லும் விஷயம் நடக்கிறது. ஆனால், பெரும்பாலான மக்களின் சிந்தனை என்ன? அது தவறு என்பதுதானே. அதனை நானும் எழுதிவிட்டேன் என்றால், ஆரோக்கியம் தான் முதன் முதலில் பெண் குழந்தை கொல்லும் விஷயத்தை எதிர்த்தவன் என்றா சொல்வார்கள்? ஆரோக்கியமும் எதிர்த்தான் என்றுதானே சொல்வார்கள்?

மேலும் இந்த ஹதீஸை பார்க்கும்போது, பெண் குழந்தையை கொல்லும் விஷயம் ஏற்கெனவே அந்த கால அரேபியாவில் தவறான விஷயமாகத்தான் பார்க்கப்பட்டிருந்தது என்பதும் தெளிவாக தெரியும். அதுவும் முக்கியமாக யூதர்களால்.

சுனான் அபு தாவூது புத்தகம் 11, எண் 2166
அபு சையது அல் குத்ரி கூறினார்
ஒரு மனிதன் சொன்னான்,”அல்லாவின் தூதரே, என்னிடம் ஒரு அடிமைப்பெண் இருக்கிறாள். அவளுடன் உடலுறவு கொள்ளும்போது, நான் விந்து வெளியேறும்முன்னர், ஆண் குறியை எடுத்துவிடுகிறேன். அவள் கர்ப்பமாக ஆவதை நான் விரும்பவில்லை. ஒரு ஆண் என்ன விரும்புவானோ அதனைத்தான் நானும் விரும்புகிறேன்.”
அவ்வாறு விந்து வெளியேறுமுன்னர் ஆண்குறியை எடுப்பது சிறிய அளவில் பெண் குழந்தைகளை புதைப்பதற்கு சமானம் என்று யூதர்கள் கூறுகிறார்கள். அதற்கு முகம்மது கூறினார்,”யூதர்கள் பொய் சொல்கிறார்கள். அல்லா எதனை உருவாக்க விரும்புகிறாரோ அதனை யாராலும் தடுக்க முடியாது”
#
இதன் மூலம் யூதர்கள் அந்த காலத்தில் இவ்வாறு பெண் குழந்தைகளை உயிரோடு புதைப்பதை எதிர்த்தார்கள் என்பதை அறியலாம். அந்த காரணத்தினாலேயே புணர்ச்சி இடைமறிப்பு செய்வதை யூதர்கள் ஆதரிக்கவில்லை என்பதையும் அறியலாம். அதுவே அந்தகாலத்தில் பலரும் எதிர்த்தாலும் ஒரு சிறு அளவில் அங்கங்கு நடந்து கொண்டு இருந்தது. அதனைத்தான் முகம்மதுவும் எதிர்ப்பதாக சொல்லிக்கொண்டான். ஆகவே இஸ்லாமிய பிரச்சாரகர்கள் சொல்வது போன்று, அந்த கால அரேபியாவில் பெண் குழந்தைகளை புதைப்பதை எதிர்த்த முதல் ஆள் முகம்மது அல்ல.

##

முஸ்லீம் பெண்களின் விதிக்கு இன்னொரு விஷயமும் முக்கிய பங்காற்றியிருக்கிறது. அது முகம்மதுவின் மனைவியர் குரானின் மீதும் பெண்களின் சட்டங்கள் பற்றி குரானின் வரிகள் மீதும் செலுத்திய பாதிப்பு.

முகம்மதுவுக்கு எப்போதேனும் இறுதியாக ஒருவார்த்தை சொல்ல வேண்டுமென்றாலோ மற்றவர்களின் வாயை அடைக்க வேண்டுமென்றாலோ, உடனே அல்லாவை இழுத்துவந்து ஒரு குரான் வரி சொல்வான். முகம்மது வயதானவன். அவனிடம் ஏராளமான மனைவியர் ஏராளமான அடிமை பெண்கள் இருந்தனர். எல்லா மனைவியரும் இளம் வயதினர் அழகானவர்கள். (முதலிரண்டு தவிர. கதீஜாவும் சவுதாவும் அவன் ஏழையாக இருந்தபோது திருமணம் செய்தவர்கள்). வயதான காலத்தில் அவன் வலிமை வாய்ந்த அரசனாக ஆகியிருந்தான். ஆகவே அவன் யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்யலாம். ஒரு சிலர் அவனிடம் தானாகவே வலிய வந்து தங்களை அவனுக்கும் தந்திருக்கிறார்கள். ஆகவே அவன் அவர்களில் அழகானவர்களையே தேர்ந்தெடுத்திருக்கிறான். ஆனால் அரசு அதிகாரம் என்பது உடல் வலிமைக்கு மாற்று அல்ல. அவனது மனைவியருக்கும் தனக்கும் உள்ள வயது வித்தியாசத்தை அறிந்தே இருந்தான். அதனால், வேறொரு இளம் வாலிபர்கள் தன் மனைவியரை தள்ளிக்கொண்டு போய்விடாமல் இருக்கவேண்டும் என்று பொறாமை கொண்டவனாகவும் இருந்தான்.

33.30
O Consorts of the Prophet! If any of you were guilty of evident unseemly conduct, the Punishment would be doubled to her, and that is easy for Allah.

33:30 நபியுடைய மனைவிகளே! உங்களில் எவரேனும் பகிரங்கமான மானக்கேடு செய்வாராயின், அவருக்கு வேதனை இரட்டிக்கப்படும் இது அல்லாவுக்கு மிகவும் சுலபமேயாகும்!

31. But any of you that is devout in the service of Allah and His Messenger, and works righteousness,- to her shall We grant her reward twice: and We have prepared for her a generous Sustenance.

33:31 அன்றியும் உங்களில் எவர் அல்லாவுக்கும் அவனுடைய தூதருக்கும் வழிபட்டு, நல்ல அமல் செய்கிறாரோ, அவருக்கு நாம் நற்கூலியை இருமுறை வழங்குவோம் இன்னும் அவருக்கு கண்ணியமான உணவையும் சித்தம் செய்திருக்கிறோம்.

மற்ற ஆண்களின் கவனத்தை பெறும் அளவுக்கு நடக்கக்கூடாது என்றும், வெளியாட்களின் பார்வை படக்கூடாது என்று தங்களை மூடிக்கொள்ள வேண்டும் என்றும் ஞாபகமூட்டுவான்.

32. O Consorts of the Prophet! Ye are not like any of the (other) women: if ye do fear (Allah), be not too complacent of speech, lest one in whose heart is a disease should be moved with desire: but speak ye a speech (that is) just.

33:32 நபியின் மனைவிகளே! நீங்கள் பெண்களில் மற்றப் பெண்களைப் போலல்ல. நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விரும்பினால், (அந்நியருடன் நடத்தும்) பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனெனில் எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்) இருக்கின்றதோ, அ(த்தகைய)வன் ஆசை கொள்வான். இன்னும் நீங்கள் நல்ல பேச்சே பேசுங்கள்.

33. And stay quietly in your houses, and make not a dazzling display, like that of the former Times of Ignorance; and establish regular Prayer, and give regular Charity; and obey Allah and His Messenger. And Allah only wishes to remove all abomination from you, ye members of the Family, and to make you pure and spotless.

33:33 (நபியின் மனைவிகளே!) நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள். முன்னர் அஞ்ஞான காலத்தில் (பெண்கள்) திரிந்து கொண்டிருந்ததைப் போல் நீங்கள் திரியாதீர்கள். தொழுகையை முறைப்படி உறுதியுடன் கடைப்பிடித்து தொழுங்கள். ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். அல்லாவுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள். (நபியின்) வீட்டையுடையவர்களே! உங்களை விட்டும் அசுத்தங்களை நீக்கி, உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்கிவிடவே அல்லா நாடுகிறான்.

மேல்கண்டவை, ஏராளமான அழகான இளம் பெண்களை மனைவியராக கொண்டிருக்கும் வயதானவனின் கவலைகளை தெள்ளென படம் பிடித்துக்காட்டுகின்றன. அவர்களை இவன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். அதனாலேயே இவர்களை உடல் அனைத்தையும் மூடிக்கொண்டு இருக்கும்படி ஆணையிடுகிறான். இது ஆரம்பத்தில் நபியின் மனைவிமாருக்கு என்று இடப்பட்ட கட்டளை இன்று ஷாரியாவின் பகுதியாக உலகெங்கும் உள்ள இஸ்லாமிய நாடுகளில் திணிக்கப்படுகிறது.

தன் கணவன்களுக்கு கீழ்ப்படிவதை முகம்மது அடிக்கடி வலியுறுத்திச் சொல்கிறான். முகம்மதின் மனைவிமார்கள் பதின்ம பிராயத்தைச் சார்ந்த இளம் பெண்களாக இருந்ததால், அவர்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்ற ஆவலினால் தோன்றியவையா? இவர்கள் இவன் சொல்லும் வார்த்தைகளை கேட்காததினால், அல்லாவை வைத்து இவர்களை ஒரு வழிக்கு கொண்டு வர விரும்பியதாலா? ஆக, இவனுக்கு ஏதேனும் குடும்ப பிரச்னையிருந்தால் உடனே அல்லா ஓடி வந்து எதேனும் வசனங்களை தெளித்து இவனது மனைவிமார்கள் இருக்க வேண்டிய இடத்தில் இருக்க வைப்பார்.

குரான் 66:5 அவர் (முகம்மது) உங்களை (மனைவியரை) ‘தலாக்” சொல்லி விட்டால், உங்களை(முகம்மதுவின் தற்போதைய மனைவியரை) விடச் சிறந்த - முஸ்லிம்களான, முஃமினான, (இறைவனுக்கு) வழிபட்டு நடப்பவர்களான, தவ்பா செய்பவர்களான, வணங்குபவர்களான, நோன்பு நோற்பவர்களான - கன்னிமை கழிந்தவர், இன்னும் கன்னிப் பெண்டிர் - இத்தகையவரை அவருடைய இறைவன் அவருக்கு (உங்களுக்குப்) பகரமாக, மனைவியராய் கொடுக்கப் போதுமானவன்.

இஸ்லாம் வருவதற்கு முன்னால், அரேபியப் பெண்களுக்கு நிறைய சுதந்திரமும், அதிகாரமும் இருந்தது என்பதற்கு உதாரணம் முகம்மதின் முதல் மனைவி கதீஜா சொந்தமாக வியாபார நிறுவனம் வைத்திருந்தார் என்பதும், அவரிடம் ஏராளமான ஆண்கள் வேலை செய்துவந்தார்கள் என்பதுவுமே. உண்மையில் கதீஜா அவர்களிடம் வேலை செய்து வந்த ஏராளமான ஆண்களில் ஒருவன்தான் முகம்மது. இஸ்லாம் தோன்றிய பின்னால், எந்த அளவுக்கு பெண்களின் நிலை இருந்தது என்பதை நீங்களே சிந்தித்துப்பாருங்கள். ஒரு நாட்டில் இஸ்லாம் வருவதற்கு முன்னால் எப்படி நிலை இருந்தது, வந்த பின்னால் எப்படி இருந்தது என்பதையும் சற்றே சிந்தித்துப் பாருங்கள்.

பெண்களுக்கு மூளை கிடையாது என்பதும், புத்தி மட்டு என்பதும், பெரும்பாலான பெண்கள் நரகத்துக்குத்தான் போவார்கள் என்பதும் அவன் நம்பிய விஷயங்கள். அதற்கு காரணம் அவர்கள் அல்லாவிடம் நன்றியுடன் இல்லாமல் இருப்பதால் அல்ல, கணவன்களிடம் நன்றியுடன் இல்லாமல் இருப்பதால்!

புகாரி தொகுப்பு 2, புத்தகம் 24, எண் 541
அபு செய்து அல் குத்ரி
அல்லாவின் தூதர் முஸாலாவுக்குச் சென்றார். தொழுகையை முடித்ததும், பிரசங்கம் செய்தார். பிறகு தொழுகைக்கு வந்திருந்தவர்களிடம் பிச்சை போடும்படி சொன்னார். “ஓ மக்களே, பிச்சை போடுங்கள்” என்றார். அவர் பெண்களிடம் சென்று “ஓ பெண்களே, பிச்சை போடுங்கள். நரகத்தீயில் இருப்பவர்களில் பெரும்பாலோனோர் பெண்களே என்பதை நான் பார்த்தேன். ” பெண்கள் கேட்டார்கள்”ஓ. அல்லாவின் தூதரே, ஏன் அப்படி சொல்கிறீர்கள்?” அவர் பதில் சொன்னார், “ஓ பெண்களே, நீங்கள் அடிக்கடி கெட்ட வார்த்தை பேசுகிறீர்கள், உங்கள் கணவர்களிடம் நன்றியில்லாமல் இருக்கிறீர்கள், உங்களை விட புத்தி மட்டானவர்களையும், மத நம்பிக்கை இல்லாதவர்களையும் நான் பார்க்கவில்லை. ஓ பெண்களே, உங்களில் சிலர், ஜாக்கிரதையான ஆணையும் தவறான வழியில் செலுத்துகிறீர்கள்”

ஆண்களை தவறான வழியில் செலுத்துவதற்காகவும், தங்கள் கணவன்களிடம் நன்றியில்லாமல் இருப்பதற்காகவும், புத்தி மட்டாக இருப்பதற்காகவும், பெண்கள் நரகத்துக்குப் போவார்கள் என்பது நம்ப முடியாத விஷயம். இப்படி பேசும் முகம்மது பெண்களை மதித்தான் என்று சொல்வது அபத்தம். இந்த ஹதீஸின் பல்வேறு வடிவங்களில் பல இடங்களில் இருக்கிறது. இன்னொரு இடத்தில் முகம்மது விளக்குகிறான்.

புகாரி, தொகுப்பு1, புத்தகம் 6, எண் 301
அபு செய்யது அல் குத்ரி சொன்னார்,
ஒரு முறை அல்லாவின் தூதர் முஸாலாவுக்குச் சென்று இதுல் ஆதா தொழுகையோ அல்பித்ர் தொழுகையோ செய்யச் சென்றார். அதன் பிறகு பெண்கள் பக்கம் சென்று” ஓ பெண்களே, பிச்சை போடுங்கள். நரகத்தீயில் இருப்பவர்களில் பெரும்பாலானவர் பெண்களே நீங்கள்தான்” என்று சொன்னார். அவர்கள் “அல்லாவின் தூதரே, ஏன் அப்படி?” என்று கேட்டார்கள். அவர் பதிலிறுத்தார், “நீங்கள் அடிக்கடி திட்டுகிறீர்கள். உங்கள் கணவன்களிடம் நன்றியில்லாமல் இருக்கிறீர்கள். உங்களை விட புத்திமட்டானவர்களையும் மத நம்பிக்கையில்லாதவர்களையும் நான் பார்க்கவில்லை.” பெண்கள்,”ஓ அல்லாவின் தூதரே, எங்கள் புத்தியில் மட்டானதும், மத நம்பிக்கையில் குறைபாடும் ஏன்?” என்று கேட்டார்கள். அவர்,”இரண்டு பெண்களின் சாட்சியம் ஒரு ஆணின் சாட்சியத்துக்கு நிகரானது அல்லவா?” என்று கேட்டார். பெண்கள் ஆமாம் என்றார்கள். “இது பெண்களின் புத்தி மட்டு என்பதற்கான ஆதாரம். பெண் தனது மாதவிடாய் நேரத்தில் தொழுகை செய்யவோ விரதம் இருக்கவோ முடியாது என்பதும் உண்மை அல்லவா?” பெண்கள் அதற்கும் ஆமாம் என்றார்கள். அவர்” இது அவர்களது மத நம்பிக்கையில் உள்ள குறைபாடு” என்றார்.

ஆகவே, முகம்மதின் பிரம்மாதமான தர்க்கத்தின் அடிப்படையில், இரண்டு பெண்களின் சாட்சியம் ஒரு ஆணின் சாட்சியத்துக்கு ஒப்பானது என்பது பெண்களின் புத்தி மட்டு என்பதற்கான நிரூபணம்! மத நம்பிக்கையில் குறைபாடு உள்ளதன் காரணம், அவர்களால், மாத விடாய் காலத்தில் தொழுகை செய்யவோ, விரதம் இருக்கவோ முடியாது என்பது! deficient in religion என்று முகம்மது சொன்னதன் உள் அர்த்தம், ஆன்மீக ரீதியில் பெண்கள் ஆண்களை விட குறைவான வகையில்தான் வளர்ந்திருக்கிறார்கள் என்பதா என்று தெரியாது. சாக்குகள் மூலம் தனது நிலைப்பாட்டை நியாயப்படுத்த முனையும் இப்படிப்பட்ட வழிகளால், அந்த கால அரேபியாவில் ஏற்கெனவே இப்படிப்பட்ட நேர்மையற்ற சட்டங்கள் இருந்து வந்தன என்பதை காணலாம். ஆனால் முகம்மது இந்த புராதன சட்டங்களை குரானில் செருகியதன் மூலம் எல்லா நாட்டு முஸ்லீம்கள் தலையில் இந்த பண்டைய அரேபிய சட்டங்களை ஏற்றிவைத்திருக்கிறான். ஒரு அபத்தத்தை நிரூபிக்க இன்னொரு அபத்தத்தையா உபயோகப்படுத்துவார்கள்?

இரண்டு பெண்களின் சாட்சியம் ஒரு ஆணின் சாட்சியத்துக்கு சமமானது என்று யார் சொன்னது? ஏற்கெனவே இந்த சட்டங்கள் இருந்திருந்தாலும், அல்லது இந்த சட்டங்களை குரானில் இவனே திணித்திருந்தாலும், அந்த அபத்தத்தை நிரூபணமாக வைத்துக்கொண்டு பெண்களை புத்தி மட்டு என்று நிரூபிப்பது மாபெரும் அபத்தம்.

முகம்மது எப்போதுமே பயத்தை ஒரு வழியாக உபயோகித்து தனக்கு வேண்டும் விஷயங்களை சாதித்துக்கொள்வான் என்பது பழக்கமான விஷயம். சும்மா சாதாரணமான விஷயங்களுக்கெல்லாம், அல்லா பெண்களை நரகத்துக்கு அனுப்புவார்.

புகாரி, தொகுப்பு2, புத்தகம் 18, எண் 161
அப்துல்லா பின் அப்பாஸ் கூறியது.
“நான் நரகத்தீயை பார்த்தேன். அதைவிட மோசமான ஒரு காட்சியை பார்த்ததில்லை. அந்த நரகத்தீயில் இருப்பவர்களில் பெரும்பாலோனோர் பெண்களே” என்றார். மக்கள்,”ஓ அல்லாவின் தூதரே, ஏன் அப்படி?” என்றார்கள். முகம்மது,”அவர்களது நன்றிகெட்டதனத்தினால்” என்றார். அல்லாவிடம் நன்றிகெட்டத்தனமாக இருந்ததினாலா என்று கேட்டதற்கு, முகம்மது,”தங்கள் கணவன்களிடம் நன்றிகெட்டு இருந்ததினால், அந்த கணவன்கள் செய்யும் நல்ல விஷயங்களுக்கு நன்றிகெட்டு இருப்பதினால். நீங்கள் உங்கள் மனைவியரில் ஒருத்தியிடம் வாழ்நாள் முழுவதும் நல்ல விஷயங்களை செய்து கொண்டிருந்தாலும், உங்களிடம் ஏதேனும் குறையைக் கண்டால், “உன்னால் நான் எந்த நல்லதையும் பெறவில்லை” என்று சொல்வாள்”

ஆனால், தங்கள் மனைவியரை தவறாக நடத்தும் ஆண்களுக்கு எந்தவிதமான விளைவுகளும் தரப்படுவதில்லை. சொல்லபோனால், தங்கள் மனைவியரை வார்த்தைகளால் திட்டும்படியும், அடிக்கும்படியும் ஆண்கள் உபதேசிக்கப்படுகிறார்கள். ஆமா, அல்லா அதுதான் சொல்லியிருக்கிறாராம்.

Q.4:34
Men are the maintainers of women because Allah has made some of them to excel others and because they spend out of their property; the good women are therefore obedient, guarding the unseen as Allah has guarded; and (as to) those on whose part you fear desertion, admonish them, and leave them alone in the sleeping-places and beat them; then if they obey you, do not seek a way against them; surely Allah is High, Great.

குரான் 4.34
4:34 (ஆண், பெண் இருபாலாரில்) அல்லா சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான். (ஆண்கள்) தங்கள் சொத்துகளிலிருந்து (பெண் பாலாருக்காகச்) செலவு செய்து வருவதினாலும், ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். எனவே நல்லொழுக்கமுடைய பெண்டிர் (தங்கள் கணவன்மார்களிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். (தங்கள் கணவன்மார்கள்) இல்லாத சமயத்தில், பாதுகாக்கப்பட வேண்டியவற்றை, அல்லாவின் பாதுகாவல் கொண்டு, பாதுகாத்துக் கொள்வார்கள். எந்தப் பெண்கள் விஷயத்தில் - அவர்கள் (தம் கணவருக்கு) மாறு செய்வார்களென்று நீங்கள் அஞ்சுகிறீர்களோ, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள். அவர்களைப் படுக்கையிலிருந்து விலக்கிவிடுங்கள். அவர்களை அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு வழிப்பட்டுவிட்டால், அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள் - நிச்சயமாக அல்லா மிக உயர்ந்தவனாகவும், வல்லமை உடையவனாகவும் இருக்கின்றான்.

இஸ்லாத்தில் பெண்களின் நிலையைப் பற்றி யாருக்கேனும் சந்தேகம் இருந்தால், மேற்கண்ட வசனம் அதனை நிவர்த்தி செய்துவிடும். தெளிவாகவே, ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வெண்டும் என்று சொல்கிறது. அவர்களது சுதந்திரம், சுயாதிகாரம் ஆகியவற்றை நீக்கி, அவர்களை ஆண்களின் அடிமைகளாக ஆக்கிவிடுகின்றது. (குறிப்பு: கனிதத் என்ற வார்த்தை ஒரு பெண் கீழ்ப்படிந்து நடப்பதற்கு பயன்படுத்திய வார்த்தை. பல இடங்களில் இது அல்லாவுக்கு கீழ்ப்படிவதற்காக உபயோகப்படுத்தப்படுகிறது என்பதையும் கவனிக்க வேண்டும். அதாவது அல்லாவுக்குக் கீழ்ப்படிவது போல கணவனுக்கும் கீழ்ப்படியவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை ஒப்பிட்டு சில ஹதீஸ்கள் இருக்கின்றன. இங்கே குரானில் “அடிக்க” என்பதற்கு உபயோகப்படுத்தியிருக்கும் அரபி வார்த்தை அட்ரிபு. இதற்கு மெல்லமாக அடிப்பது என்றெல்லாம் பொருள் கிடையாது. சுனான் அபு தாவூது மனைவியரை அடிப்பது பற்றிய ஹதீஸ்களை தனியே தொகுத்திருக்கிறார்.

இந்த வார்த்தை “அட்ரிபு” உபயோகப்பட்டிருக்கும் இன்னொரு குரான் வசனம், காஃபிர்களை எப்படி அடிக்கவேண்டும் என்று “அல்லா” சொல்கிறார்.

8:12 - “”Strike” off their heads, “strike” off the very tips of their fingers!”

சொன்ன பேச்சு கேட்காத மனைவியரை அடிக்க சொல்லும் வார்த்தை உபயோகப்பட்டிருக்கும் இன்னொரு இடம், காஃபிர்களின் கழுத்தை வெட்டு, அவன் விரல் நுனியை எல்லாம் வெட்டு என்று சொல்லும் இடம்!

#
பெண்கள் தனியே வேலை செய்யக்கூடாதென்றும், சுதந்திரமாக இருக்கக்கூடாதென்றும், மேற்கண்ட வசனம் உள்ளுரையாக தெரிவிக்கின்றது. அவள் வீட்டை விட்டு வெளியேறாமல், குழந்தைகளை மட்டும் பார்த்துக்கொண்டு, அவளது கணவன் போடும் ரொட்டிக்கு நன்றியுள்ளவளாக இருக்க வேண்டும் என்றும் கோருகிறது. இம்மட்டில் ஒரு பெண் அடிமையைத் தவிர வேறேதும் இல்லை என்று நிர்ணயித்தாயிற்று.

இருப்பினும் முகம்மது இத்தோடு விடுவதில்லை. அவர்களை கடுமையாக திட்டவும், அடிக்கவும் அனுமதி அளிக்கிறான். இந்த காலத்தில் ஒரு மிருகத்தை அடித்தாலும் நீங்கள் நீதிமன்றத்துக்கு சென்று தண்டனையோ அல்லது பைனோ கட்டவேண்டும். ஆனால் இங்கு மனைவியை அடிக்க கடவுளே அனுமதி அளிக்கிறார் என்று முகம்மது சொல்கிறான். இதுதான் எல்லையற்ற அருளாளனும் எல்லையற்ற கருணையாளன் என்று இவன் சொல்லிகொள்ளும் அல்லாவின் போதனைகள் என்று நம்பச்சொல்கிறான் முகம்மது.

மனைவியை கணவன் அடித்தான் என்று டொமஸ்டிக் வயலன்ஸ் வழக்கு போட்டால், முஸ்லீம்கள், எங்கள் அல்லா அப்படித்தான் செய்யச்சொல்லியிருக்கிறார் என்று சொல்லிவிட்டு, “சிறுபான்மை உரிமைகளில்” தைரியமாக வெளியே வந்து கோர்ட் முன்னாலேயே ஏன் நீதிபதி முன்னாலேயே பெண்டாட்டியை தாராளமாக போட்டு வெளுக்கலாம்.

#
பெண்ணை விட ஆண் உயர்ந்த ஸ்தானத்தில் இருப்பவன் என்பது இன்னொரு குரான் வசனத்திலும் திருப்பிச் சொல்லப்படுகிறது (”and men are a degree above them (women)”). ஆண்களுக்கு அவர்கள்மீது ஒருபடி உயர்வுண்டு Q.2:228

2:228 தலாக் கூறப்பட்ட பெண்கள், தங்களுக்கு மூன்று மாதவிடாய்கள் ஆகும்வரை பொறுத்து இருக்க வேண்டும். அல்லாவையும், இறுதி நாளையும் அவர்கள் நம்புவார்களாயின், தம் கர்ப்பக் கோளறைகளில், அல்லா படைத்திருப்பதை மறைத்தல் கூடாது. ஆனால் பெண்களின் கணவர்கள் (அவர்களைத் திரும்ப அழைத்துக் கொள்வதன் மூலம்) இணக்கத்தை நாடினால், (அத்தவணைக்குள்) அவர்களை (மனைவியராக)த் திருப்பிக்கொள்ள அவர்களுக்கு அதிக உரிமையுண்டு, கணவர்களுக்குப் பெண்களிடம் இருக்கும் உரிமைகள் போன்று, முறைப்படி அவர்கள்மீது பெண்களுக்கும் உரிமையுண்டு. ஆயினும் ஆண்களுக்கு அவர்கள்மீது ஒருபடி உயர்வுண்டு

#

Book 11, Number 2142:
புத்தகம் 11, எண் 2142
உமர் இபின் அல் கட்டாப்
அல்லாவின் தூதர் சொன்னார், “ஏன் தன் மனைவியை அடித்தான் என்று ஒரு ஆணிடம் கேட்கப்படாது”

#

இன்னொரு இடத்தில், “அல்லாவின் தூதர்” பெண்களை சாத்தானுடன் ஒப்பிடுகிறான்.

புகாரி தொகுப்பு1. புத்தகம் 6, எண் 301
ஜாபிர் கூறியது:
அல்லாவின் தூதர் ஒரு பெண்ணைப் பார்த்ததன் பின்னால், வீட்டுக்கு வந்து அங்கு தோல் பதனிட்டுக்கொண்டிருந்த தன் மனைவி ஜைனப்புடன் உடலுறவு கொண்டார். பிறகு அவர் தன் தோழர்களிடம் சென்று சொன்னார்,”பெண் வயதாகி ஒரு சாத்தானின் உருவில் ஓய்வெடுக்கிறாள்THE WOMAN ADVANCES AND RETIRES IN THE SHAPE OF A DEVIL” ஆகவே, உங்களில் யாரேனும் ஒரு பெண்ணைப் பார்த்தால், உடனே மனைவியிடம் செல்லவேண்டும். அது உள்ளத்தில் இருப்பதை வெளியேற்றிவிடும்.

தெருவில் போகும் பெண்ணைப்பார்த்து காமவயப்பட்டு மனைவியிடம் சென்று உடலுறவு கொள்வது புனிதமானதாக முகம்மதுவுக்கு பட்டிருக்கும். ஆனால், வேறொரு பெண்ணைப் பார்த்து காமவயப்பட்டு தன்னிடம் வந்து எவளையோ நினைத்து தன்னிடம் கணவன் உடலுறுவு கொள்வதை நினைத்தால் ஒரு மனைவிக்கு எப்படியிருக்கும்?

#
அட்ரோஷியஸான ஹதீஸ்களும் குரான் வசனங்களும் ஏராளம். கீழ்க்கண்டது உண்மையிலேயே மிக மோசமானது

Bukhari Volume 4, Book 54, Number 460:
புகாரி, தொகுப்பு 4, புத்தகம் 54, எண் 460

Narrated Abu Huraira:
அபு குரைரா சொன்னது:
அல்லாவின் தூதர் சொன்னார்,”ஒரு கணவன் தன் மனைவியை படுக்கைக்கு உடலுறவுகொள்ள கூப்பிட்டு, அவள் மறுத்து, அவன் கோவத்துடன் தூங்கினால், தேவதைகள் அவளை காலைவரைக்கும் சபிப்பார்கள்”

அல்லாவின் மதத்தில் இருக்கும் ஆண்களின் பாலுறவு சந்தோஷத்துக்கு கவலைப்படுவதைவிட அல்லாவுக்கு வேறு ஏதும் வேலை இல்லையா என்ன? கணவனின் காமப்பசிக்கு ஒத்துழைக்காத மனைவியை திட்டுவதற்கு என்று பல தேவதைகளை கடவுள் அனுப்பி திட்ட வைப்பார் என்பது அபத்தமாக இல்லை?

இது மாதிரி ஹதீஸ்கள் பல முறை திருப்பித்திருப்பி வருவது அல்லாவை படு கேவலமான ஆளாக அல்லவா ஆக்குகிறது?

Sahih Muslim Book 008, Number 3367:

Abu Huraira (Allah be pleased with him) reported Allah’s Messenger (may peace be upon him) as saying: By Him in Whose Hand is my life, when a man calls his wife to his bed, and she does not respond, the One Who is in the heaven is displeased with her until he (her husband) is pleased with her.

#

Bukhari Volume 7, Book 62, Number 122:

Narrated Abu Huraira:
The Prophet said, “If a woman spends the night deserting her husband’s bed (does not sleep with him), then the angels send their curses on her till she comes back (to her husband).”

#

ஏன் முகம்மது இந்த விஷயத்துக்கு அடிக்கடி கவலைப்பட்டார் என்பது சரியாக புரியவில்லை. முகம்மதுவுக்கு வயதாகிவிட்டது என்பதையும் நாம் ஞாபகம் வைத்துக்கொள்ளவேண்டும். ஆனால் அவனது மனைவியர்கள் அழகான இளம் பெண்களாக இருந்தார்கள். நபியின் மனைவி என்ற பெருமை இருந்தாலும், வயதான் இந்த மனிதனோடு படுக்க விருப்பமில்லாமல் இருந்திருக்கலாம். ஒருவேளை இப்படிப்பட்ட அல்லாவின் வெறுப்பு, தேவதைகளின் திட்டு சாபம் ஆகியவை இந்த பெண்களை தன்னோடு படுக்க வைக்கும் முயற்சியாக இருந்திருக்கலாம்.

#
கீழ்க்கண்ட ஹதீஸ் மிக மிக மோசமான, பெண்களை மிகவும் கேவலப்படுத்தும் ஹதீஸ்.

Bukhari Volume 7, Book 62, Number 33:
புகாரி, தொகுப்பு 7, புத்தகம் 62, எண் 33

உஸாமா பின் சைத் கூறினார்
அல்லாவின் தூதர் சொன்னார்,”எனக்குப் பிறகு ஆண்களுக்கு பெண்களை விட மிக மோசமான வியாதியை விட்டுச் செல்லவில்லை” (”After me I have not left any affliction more harmful to men than women.”)

#
முகம்மதின் வாழ்க்கையில் நடந்த விஷயங்கள் இவனது குணத்தை இன்னும் வெளிச்சம் போட்டு காட்டுபவை.

Bukhari Volume 7, Book 63, Number 182:
புகாரி தொகுப்பு 7, புத்தகம் 63, எண் 182

Narrated Abu Usaid
அபு உஸைது கூறினார்.

அஷ்-ஷவுத் என்ற தோட்டத்துக்கு அல்லாஇவின் தூதருடன் நாங்கள் சென்றோம். இரண்டு சுவர்கள் வரும் வரைக்கும் சென்று அங்கு அமர்ந்தோம். தூதர் “இங்கே உட்காருங்கள்” என்று சொல்ல நாங்கள் உட்கார்ந்தோம். பானி ஜான் என்ற ஜாதியைச் சேர்ந்த ஜாவுனியா என்ற பெண் அங்கு கொண்டுவரப்பட்டு அங்கு உமைமா பிந்த் அன்-நுமான் பின் சாராஹில் என்பவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்தார். அவளது தாதியும் அங்கு இருந்தார். அல்லாவின் தூதர் அவளை பார்க்க வந்தபோது, அல்லாவின் தூதர், “உன்னை எனக்கு பரிசாகத் தா” என்றார். அவள், உங்களிடமிருந்து தப்ப அல்லாவிடம் எனக்கு அடைக்கலம் கேட்கிறேன்” என்றாள். அல்லாவின் தூதர் கையை உயர்த்தி அவளை அமைதிப்படுத்த முயன்றார். “யார் அடைக்கலம் கொடுப்பாரோ அவரிடமே நீ அடைக்கலம் கேட்டிருக்கிறாய்.” பிறகு தூதர் வெளியே வந்து எங்களிடம் சொன்னார்,”ஓ அபு உசைது!அவள் அணிய இஇரண்டு லினன் துணி கொடுத்து அவளது வீட்டுக்கு அவளை அனுப்பி வை” என்றார்.
#

முகம்மதிடம் போதும் போதுமென்ற அளவுக்கு பெண்கள் இல்லையா? பார்க்கும் அழகான பெண்களை எல்லாம் புணர வேண்டுமா என்ன? தன்னைப் பார்க்க வந்த பெண்ணிடமும், “உன்னை எனக்கு பரிசாகத் தா” என்று கேட்பார்களா?

#
முகம்மது கதீஜாவின் வேலைக்காரனாக வேலை செய்து வந்தது தெரியும். ஆனால், இவன் பெரிய தலையாக ஆனதும், எப்படிப்பட்ட கருத்து இவனது வாயிலிருந்து வருகிறது என்று பார்ப்போம்

சஹி புகாரி 5.59.709
அபு பக்ரா கூறியது:
அல்-ஜமால் போரின்போது அல்லாவின் தூதர் சொன்ன விஷயத்தை கேட்கும் பாக்கியம் கிடைத்தது. பெர்ஷியர்கள் (ஈரான்) கோஸ்ரோவின் மகளை தங்கள் ராணியாக முடிசூட்டியதை கேள்விப்பட்ட அல்லாவின் தூதர் சொன்னார்,”ஒரு பெண்ணால் ஆளப்படும் மக்கள் எப்போதும் வெற்றிகரமாக இருக்க முடியாது”

#

பாகிஸ்தான் என்ற இஸ்லாமிய நாட்டை இந்திராகாந்தி என்ற பெண் தோற்கடித்தது, அல்லாவின் தூதரை பொய்யர் என்று நிரூபித்துவிட்டதுதானே? அது கிடக்கட்டும். எப்படிப்பட்ட கருத்து வெளிப்படுகிறது என்று பாருங்கள். இவன் கதீஜாவுக்குக் கீழ் வேலைக்காரனாக வேலை செய்திருக்கிறான். எப்படிப்பட்ட வெற்றிகரமான வியாபார நிறுவனத்தை அவர் நடத்தி வந்தார் என்பதையும் முகம்மது அறிவான். அப்படியிருந்தும், பெண்கள் மீதான தன்னுடைய வெறுப்பை இப்படி பேசுவதன் மூலம் காட்டிக்கொள்கிறான்.

நிரந்தர அடிமைத்தனத்தை பெண்கள் மீது திணிக்கும் கீழ்க்கண்ட ஹதீஸை சமீபத்திய தாலிபானின் சட்டத்தோடு இணைத்து பார்க்க வேண்டும்.

அபு குரைரா கூறினார்:
அல்லாவின் தூதரின் சொல்படி” நெருங்கிய உறவினர் இல்லாமல், அல்லாவையும் இறுதித்தீர்ப்பு நாளையும் நம்பும் ஒரு பெண் ஒரு நாள் ஒரு இரவு கூட பிரயாணம் செய்வது தடை செய்யப்பட்டிருக்கிறது.” (Sahih Bukhari 2.194)

கதீஜா என்ற வெற்றிகரமான வியாபார தலைவராக இருந்த பெண்ணிடம் வேலை செய்து கொண்டிருந்த முகம்மது பெரிய ஆளாக ஆனதும், எப்படிப்பட்ட சட்டங்கள், எப்படிப்பட்ட போதனைகள் உருவாக்கப்பட்டன என்பதை பாருங்கள்.

#———————#

(மைய கட்டுரை அலி சினா எழுதியது. இவரது கட்டுரையை இந்த காணலாம். வலைத்தலத்தில். நான் சிலவற்றை நீக்கியிருக்கிறேன். சிலவற்றை சேர்த்திருக்கிறேன்)

Comments »

The URI to TrackBack this entry is: http://ennamopo.blogsome.com/2005/11/13/33-staus-of-women-improved/trackback/

No comments yet.

RSS feed for comments on this post.

Leave a comment

Line and paragraph breaks automatic, e-mail address never displayed, HTML allowed: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <code> <em> <i> <strike> <strong>























Get free blog up and running in minutes with Blogsome
Theme designed by Hadley Wickham