சமத்துவத்தைப் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது?
கேள்வி: பெண்களுக்கான சமத்துவம் பற்றி குரான் என்ன சொல்கிறது?
பதில்:
அல்லாவுக்கு புகழ்
முதலாவது:
சமத்துவம் என்று கிழக்கிலும் மேற்கிலும் பல சிந்தனையாளர்கள் பேசும் வார்த்தை திரிக்கப்பட்டது, சரியாகப் புரியாமல் எழுதப்படுவது. முக்கியமாக அந்த சமத்துவம் என்ற வார்த்தையை குரானிடமும் இஸ்லாமிடமும் பேசும்போது.
“சமத்துவத்துக்கான மதம்” என்று இஸ்லாமை நாம் பேசுவது தவறு. உண்மையில் “நீதிக்கான மதம்” என்பதையே குறிக்க வேண்டும்.
ஷேக் இபின் உத்மாயீன் சொல்வதாவது:
“இங்கு நாம் சிலர் சமத்துவம் என்பதைப் பற்றி பேசுகிறார்கள். அது தவறு. நாம் நீதியைப் பற்றி மட்டுமே பேச வேண்டும். சமத்துவம் என்பதைப் பற்றி பேசக்கூடாது. சமத்துவம் என்றால், இரண்டுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை என்பதை குறிக்கிறது. சமத்துவத்துக்கான இப்படிப்பட்ட நீதியற்ற கோரிக்கை காரணமாக, ஆணுக்கும் பெண்ணுக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஆகவே ஆண்களையும் பெண்களையும் ஒன்றாக ஆக்கிவிட்டார்கள். பிறகு கம்யூனிஸ்டுகள் “ஆள்பவருக்கும் ஆளப்படுபவருக்கும் என்ன வித்தியாசம்?” என்று கேட்கிறார்கள். யாருக்கும் யார் மீதும் அதிகாரம் இல்லாமல் போய்விடும். தந்தைகளுக்கு பிள்ளைகள் மீதும் அதிகாரம் இல்லாமல் போய்விடும்.. ”
ஆனால், நாம் நீதி என்று குறிப்பிட்டால், ஒவ்வொருவருக்கும் என்ன தேவையோ அது கொடுக்கப்படுகிறது என்று புரிந்து கொண்டால், இந்த தவறான புரிதல் போய்விடும். அப்போது சரியான பொருள் வரும். அல்லா சமத்துவத்தை போதிக்கிறார் என்று புரிந்து கொள்ளக்கூடாது.
ஓVerily, Allaah enjoins Al-Adl (i.e. justice)ஔ
நிச்சயமாக அல்லாஹ் நீதி செலுத்துமாறும், (உங்களை) ஏவுகிறான்
[al-Nahl 16:90]
ஓand that when you judge between men, you judge with justiceஔ
நியாயமாகவே தீர்ப்புக் கூறுதல் வேண்டும் என்றும் உங்களுக்கு நிச்சயமாக அல்லாஹ் கட்டளையிடுகிறான்
[al-Nisaஒ 4:58]
ஆகவே, இஸ்லாமில் சமத்துவம் இருக்கிறது என்று சொல்பவர்கள் இஸ்லாமுக்கு எதிராக பொய் சொல்கிறார்கள். சமமாக இருப்பவர்களை சமமாக நடத்துகிறது என்றும் வேறுமாதிரி இருப்பவர்களை வேறுமாதிரி இஸ்லாம் நடத்துகிறது என்றும் சொல்வதே சரி.
இஸ்லாமை அறிந்தவர்கள் இஸ்லாம் ஒரு சமத்துவ மதம் என்று சொல்ல மாட்டார்கள். சொல்லபோனால், சமத்துவம் என்ற கருத்தே தவறானது என்பதைத்தான் இஸ்லாம் வலியுறுத்துகிறது என்பதை உணர்வார்கள்.
Say: Are those who know equal to those who know not?ஔ
(நபியே!) நீர் கூறும்: ‘அறிந்தோரும், அறியாதோரும் சமமாவார்களா?
[al-Zumar 39:9]
Say: Is the blind equal to the one who sees? Or darkness equal to light?ஒ
மேலும், கூறும்: ‘குருடனும் பார்வை உடையவனும் சமமாவார்களா? அல்லது இருள்களும், ஔpயும் சமமாகுமா?
[al-Raஒd 13:16]
Not equal among you are those who spent and fought before the conquering (of Makkah, with those among you who did so laterஒ
வெற்றிக்கு முன்னர் செலவு செய்து, ஜிகாத் போரிட்டவர்களுக்கு உங்களில் நின்றும் (எவரும்) சமமாக மாட்டார். பின் செலவு செய்து ஜிகாத் போரிட்டவர்களைவிட, அவர்கள் பதவியால் மிகவும் மகத்தானவர்கள்.
[al-Hadeed 57:10]
Not equal are those of the believers who sit (at home), except those who are disabled (by injury or are blind or lame), and those who strive hard and fight in the Cause of Allaah with their wealth and their liveஒ
4:95 முஸ்லீம்களில், எந்தக் காரணமுமின்றி உட்கார்ந்திருப்பவர்களும், தங்களுடைய சொத்துகளையும், தங்களுடைய உயிர்களையும் (அர்ப்பணித்தவர்களாக) அல்லாஹ்வின் பாதையில் ஜிகாத் போர் புரிபவர்களும் சமமாக மாட்டார்கள். தங்களுடைய பொருட்களையும், தங்களுடைய உயிர்களையும்(அர்ப்பணித்தவர்களாக) ஜிகாத் போர் செய்வோரை, உட்கார்ந்திருப்பவர்களைவிட அந்தஸ்தில் அல்லாஹ் மேன்மையாக்கி வைத்துள்ளான். எனினும், ஒவ்வொருவருக்கும் (அவர்களுடைய உறுதிப்பாட்டுக்குத் தக்கபடி) நன்மையை அல்லாஹ் வாக்களித்துள்ளான். ஆனால் ஜிகாத் செய்வோருக்கோ, (ஜிகாதுக்குச் செல்லாது) உட்கார்ந்திருப்போரைவிட அல்லாஹ் மகத்தான நற்கூலியால் மேன்மையாக்கியுள்ளான்.
[al-Nisaஒ 4:95]
குரானில் ஒரு வரி கூட சமத்துவத்தை கோரவில்லை. நீதி மட்டுமே கோருகிறது. நீதி என்பது மக்களுக்கு ஒப்புக்கொள்ளக்கூடியது. ஏனெனில் பெரும்பாலான மக்கள், தன்னை இன்னொரு மனிதனோடு ஒப்பிட்டு, நான் இவனை விட அறிவிலும், வசதியிலும், செல்வத்திலும், பக்தியிலும், நல்லது செய்வதிலும் சிறப்பானவனாக இருக்கிறேன். ஆகையால் நான் அவனுக்கு சமதையாக ஆக மாட்டேன் என்றே சொல்வதை பார்க்கலாம்.
ஆண் பெண்ணுக்கு சமமானவன் என்று சொன்னால் எந்த ஆண் மகனும் ஒப்புக்கொள்ளமாட்டான்.
ஷார் அல்-அகீதா அல்-வாஸிதா 1/180-181
மேற்கண்டவைகள் அடிப்படையில், ஆணும் பெண்ணும் சமமானவர்களாக இஸ்லாமில் கருதப்படுவதில்லை. ஏனெனில் ஆணை பெண்ணுக்கு சமமாக கருதுவது ஆணுக்கு அநீதியானது. தவறான சமத்துவம் மிகவும் மோசமான அநீதி.
பெண்கள் ஆண்கள் உடுத்தும் உடையை உடுத்தக்கூடாது என்று குரான் ஆணையிடுகிறது. ஆண் வெளிக்காட்டும் உடலை பெண்கள் வெளிக்காட்டலாம் என்று சொல்வது பொருளற்றது. ஆணின் உடலும் பெண்ணின் உடலும் வேறுபட்டவை.
இரண்டாவதாக:
பல்வேறு விதங்களில் ஆணும் பெண்ணும் இஸ்லாமிய ஷாரியாபடி வேறுவிதமாக நடத்தப்படுகிறார்கள்.
உதாரணமாக,
1) வீட்டுக்கு பொறுப்பு (கிவாமா)
Allaah says (interpretation of the meaning):
ஓMen are the protectors and maintainers of women, because Allaah has made one of them to excel the other, and because they spend (to support them) from their meansஔ
(ஆண்கள்) தங்கள் சொத்துகளிலிருந்து (பெண் பாலாருக்காகச்) செலவு செய்து வருவதினாலும், ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருப்பதினால் அல்லாஹ் சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான்.[al-Nisaஒ 4:34]
இபின் கதீர் (அல்லா அவரது ஆன்மாவின் மீது கருணை வைக்கட்டும்) சொன்னார்:
“அல்லா “பெண்களை பாதுகாப்பவர்களும் வழிநடத்துபவர்களும் ஆண்கள்” என்று சொல்கிறார். அதாவது பெண்ணை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது ஆண். ஆணே வீட்டின் தலைவன். பெண் தவறான வழி சென்றால் அவளை கட்டுப்பாட்டில் வைக்கவேண்டியது ஆணே”
“அல்லா ஒருவரை மற்றவருக்கு மேற்பட்டவராக ஆக்கியிருக்கிறார். ஆண்கள் பெண்களை விட மேலானவர்கள். சிறப்பானவர்கள். ஆகவே நபித்துவம் ஆண்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது. கலீஃப்பாவும் ஆண்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இறைதூதர் முகம்மது, “ஒரு பெண்ணை தலைவராக ஆக்கும் எந்த மக்களும் நன்றாக வாழமாட்டார்கள்” என்று கூறியிருக்கிறார். இது அல்-புகாரி இந்த ஹதீஸை ஆதாரப்பூர்வமாக பதிந்திருக்கிறார். இதே ஆணையே காதிகள், நீதிபதிகள் விதயத்திலும் பொருந்தும்.
அலி இபின் அபி தல்ஹா சொன்னார், இபின் அப்பாஸ் சொன்னதை வைத்து: ஆண்களே பெண்களின் தலைவர்கள் என்றும், ஆண்கள் சொல்லுக்கு பெண்கள் கீழ்ப்படியவேண்டும் என்றும், அல்லா கோருகிறார் என்பதையே “ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள்” என்ற வரியின் பொருள்.
(Tafseer Ibn Katheer, 1/490) தஃப்ஸீர் இபின் கதீர் 1/490
2. சாட்சி சொல்லுதல்: ஒரு ஆணின் சாட்சியம் இரண்டு பெண்களின் சாட்சியத்துக்கு சமமானது என்று குரான் சொல்கிறது.
அல்லா சொல்கிறார்
ஓAnd get two witnesses out of your own men. And if there are not two men (available), then a man and two women, such as you agree for witnesses, so that if one of them (two women) errs, the other can remind herஔ
உங்கள் ஆண்களில் இருவரை சாட்சியாக்கிக் கொள்ளுங்கள்கி ஆண்கள் இருவர் கிடைக்காவிட்டால், சாட்சியங்களில் நீங்கள் பொருந்தக்கூடியவர்களிலிருந்து ஆடவர் ஒருவரையும், பெண்கள் இருவரையும் சாட்சிகளாக எடுத்துக் கொள்ளுங்கள்கி (பெண்கள் இருவர்) ஏனென்றால் அவ்விருவாpல் ஒருத்தி தவறினால், இருவாpல் மற்றவள் நினைவூட்டும் பொருட்டேயாகும் (2:282)
இபின் கதீர் சொல்கிறார்:
பெண்கள் பொதுவாக புத்தி இல்லாதவர்களாக இருப்பதினால், இரண்டு பெண்களின் சாட்சியம் ஒரு ஆணின் சாட்சியத்துக்கு ஈடாக ஆக்கப்பட்டது. அபு ஹரையா அவர்களின் வழியே வந்த இந்த ஹதீஸை முஸ்லிம் பதிவு செய்கிறார். “ஓ பெண்களே. நன்றாக பிச்சை போடுங்கள். நிறைய மன்னிப்பு கேளுங்கள். ஏனெனில், நரகத்தில் இருக்கும் பெரும்பான்மையினர் பெண்களே என்று பார்த்திருக்கிறேன்.” அந்த கூட்டத்தில் இருந்த ஒரு புத்திசாலி பெண் கேட்டாள், “இறைதூதரே, ஏன் அப்படி? ஏன் நரகத்தில் இருக்கும் பெரும்பான்மையினர் பெண்களாகவே இருக்கிறார்கள்?” அவர் சொன்னார்,”ஏனெனில் நீங்கள் நிறைய திட்டுகிறீர்கள். உங்கள் கணவனுக்கு நன்றியில்லாமல் இருக்கிறீர்கள். பொதுப்புத்தியும் உங்களுக்குக் குறைவாக இருக்கிறது. உங்களால் சரிவர மதத்தையும் பின்பற்ற முடியவில்லை. இது தவிர புத்தியுள்ளவர்களின் ஞானத்தையும் காணாமல் அடித்துவிடுகிறீர்கள்” அந்த பெண் கேட்டாள்,” எங்கள் பொதுப்புத்தியில் என்ன குறைபாடு? எங்கள் மத நம்பிக்கையில் என்ன குறைபாடு?”. அவர் சொன்னார், “ஒரு ஆணின் சாட்சியம் இரண்டு பெண்களின் சாட்சியத்துக்கு நிகரானது என்பது உங்களது பொதுப்புத்தியில் உள்ள குறைப்பாட்டுக்கு நிரூபணம். ரமதான் மாதத்திலும் ஒரு சில நாட்களில் (மாதவிடாய் காரணமாக) தொழுமை செய்யமுடியாது என்பது உங்கள் மதத்தில் உள்ள குறைபாடு” என்றார்.
(Tafseer Ibn Katheer, 1/336) தஃப்ஸீர் இபின் கதீர் 1/336
ஒரு சில பெண்கள் சில ஆண்களை விட புத்திசாலிகளாக இருக்கலாம். ஆனால் பொதுவான விதிமுறையின் படி, அப்படிப்பட்ட பெண்கள் பெரும்பான்மையாக இல்லை. ஷாரியா என்பது பொதுவான விஷயத்தையும் அதிகமாக இருக்கக்கூடிய விஷயத்தையும் அடிப்படையாகக் கொண்டது.
பெண்கள் புத்தியில்லாதவர்கள் என்ற உண்மையின் பொருள், அவர்கள் பைத்தியக்காரர்கள் என்று அர்த்தமல்ல. மாறாக அவர்கள் வெகு விரைவில் உணர்ச்சிகளால் தூண்டப்பட்டுவிடுகிறார்கள் என்பதும், அது ஆண்களை விட பெண்களுக்கு அதிகம் நடக்கிறது என்பதும்தான். கர்வமுள்ளவன் தவிர வேறொருவனும் மறுக்கமாட்டான்.
3. சொத்துப்பிரிப்பில் ஒரு ஆணுக்கு கிடைப்பதைவிட பெண்ணுக்கு பாதி அளவுதான் தரப்படும்
அல்லா சொல்கிறார்.
ஓAllaah commands you as regards your childrenஒs (inheritance): to the male, a portion equal to that of two femalesஔ
“ஓர் ஆணுக்கு இரண்டு பெண்களுக்குக் கிடைக்கும் பங்குபோன்றது கிடைக்கும் என்று அல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கின்றான்”
[al-Nisaஒ 4:11]
அல்-குர்துபி கூறினார்:
மக்களை விட அல்லாவுக்கு நன்றாக விஷயம் தெரியுமென்பதால், அவர்களுக்கு எதுஇ நல்லதோ அதனை அவர் சொத்துப்பிரிப்பில் கூறியிருக்கிறார். அல்லாவுக்கு எல்லாம் தெரியும்.
Tafseer al-Qurtubi, 5/164 தஃப்ஸீர் அல்-குர்துபி 5/164
உதாரணமாக, ஒரு ஆண் பெண்ணை விட அதிகம் செலவழிக்கிறான். ஆகவே சொத்தில் அவனுக்கு நிறைய பங்கு செல்வது நீதியானது.
4. உடை.
ஒரு பெண்ணின் குறி (awrah -மர்மப்பிரதேசம்)அவளது உடல் முழுவதும். அவளது கையையும் முகத்தையும் தவிர மற்றெந்த உடல் பாகத்தையும் அவள் திறக்கக்கூடாது என்பது குறைந்த பட்சம். அவள் அவைகளையும் மூடி வைத்திருக்க வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது.
அல்லா சொல்கிறார்.
ஓO Prophet! Tell your wives and your daughters and the women of the believers to draw their cloaks (veils) all over their bodies (i.e. screen themselves completely except the eyes or one eye to see the way). That will be better, that they should be known (as free respectable women) so as not to be annoyed. And Allaah is Ever Oft-Forgiving, Most Mercifulஔ
நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண்மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் பர்தாவை உடல் முழுவதும் (வழி பார்ப்பதற்காக கண்கள் அல்லது ஒரு கண் தவிர) மூடிக்கொள்ளும்படி கூறுவீராக. அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன் மிக்க அன்புடையவன்.
[al-Ahzaab 33:59]
ஒரு ஆணின் குறி அவனது தொப்பூளிலிருந்து முழங்கால் வரைக்கும்.
Narrated by al-Haakim in al-Mustadrak (6418); classed as hasan by al-Albaani in Saheeh al-Jaamiஒ, 5583.
கீழ்க்கண்டவைகள் மேலும் சில உதாரணங்கள். இவை முழுமையான வரிசை அல்ல.
ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே உள்ள மற்ற வித்தியாசங்கள்
ஒரு ஆண் நான்கு பெண்களை திருமணம் செய்துகொள்கிறான். ஆனால் ஒரு பெண் ஒரு ஆணைத்தான் திருமணம் செய்துகொள்ள முடியும்.
ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணை விவாகரத்து செய்ய உரிமை இருக்கிறது. ஆனால் ஒரு பெண்ணுக்கு ஒரு ஆணை விவாகரத்து செய்யும் உரிமை கிடையாது.
ஒரு ஆண் யூத, கிரிஸ்துவ பெண்களை திருமணம் செய்துகொள்ளலாம். ஆனால், ஒரு முஸ்லீம் பெண் ஒரு முஸ்லீம் ஆணைத்தவிர வேறொரு ஆணை திருமணம் செய்துகொள்ளக்கூடாது.
ஒரு ஆண் தன் மனைவி இல்லாமல், அல்லது உறவுக்காரர் இல்லாமல் பிரயாணம் செய்யலாம். ஆனால் ஒரு பெண் ஒரு உறவுக்காரர் இல்லாமல் பிரயாணம் செய்யக்கூடாது.
ஒரு ஆண் மசூதியில் தொழுவது அவன் கடமை. ஆனால் ஒரு பெண்ணுக்கு அது கடமை அல்ல. ஒரு பெண்ணின் தொழுகை வீட்டுக்குள்ளேயே நடந்தால் தான் அது அல்லாவுக்கு பிடித்தமானது.
ஒரு பெண் பட்டுத்துணியும் தங்கமும் உடுத்தலாம். ஆனால் ஆண் உடுத்தக்கூடாது.
மேற்கண்டவை ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள வித்தியாசங்கள். ஏனெனில் ஆண் பெண் போல இல்லை.
ஓAnd the male is not like the femaleஔ
“ஆண், பெண்ணைப் போலல்ல”
[Aal Imraan 3:36]
ஒரு ஆண் பெண்ணை விட பல வழிகளில் வித்தியாசமானவனாக இருக்கிறான். அவனது வலிமை, உடல், அவனது கடினமான உடல் ஆகியவை. ஆனால் பெண் மிருதுவானவளாக இருக்கிறாள்.
ஆண்களின் ஞாபக சக்தியும், சிந்தனை வலிமையும் பெண்களை விட சிறந்தது. பெண்கள் ஆண்களை விட ஞாபகசக்தி குறைவானவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் அடிக்கடி பல விஷயங்களை மறந்துவிடுகிறார்கள். இது எல்லோருக்கும் தெரிந்ததுதான். உலகத்தில் இருக்கும் சிறந்த படிப்பாளிகள் ஆண்களாகவே இருக்கிறார்கள். ஒரு சில பெண்கள் சில ஆண்களை விட ஞாபகசக்தி உள்ளவர்களாக இருக்கலாம். ஆனால், பொதுவான விதியில் அப்படி இல்லை.
உணர்ச்சியிலும் கூட பெண்கள் உடனே கோபப்படுகிறார்கள். உடனே மகிழ்ச்சியாகிவிடுகிறார்கள். மிகச்சிறிய உணர்ச்சியான விஷயங்களிலும் உடனே கண்ணீர் வடிக்கிறார்கள்.
ஜிகாத் ஆண்களுக்கு ஒரு கட்டாயக்கடமை. பெண்களுக்கு அது கட்டாயக்கடமை அல்ல. அல்லாவாக கருணை கூர்ந்து அவர்களுக்கு ஏதேனும் செய்தால்தான் உண்டு.
முடிவாக, ஆண்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் விதிகளும் பெண்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் விதிகளும் வெவ்வேறானவை என்று பார்த்தோம்.
மூன்றாவது:
இஸ்லாம் ஆணையும் பெண்ணையும் ஒரு சில கடமைகளைப் பொறுத்தமட்டில் சமமாகக் கருதுகிறது. அவர்கள் மாதவிடாய் காலங்களிலும் பிள்ளைப்பேறு முடிந்த காலங்களிலும் அவர்கள் தொழுகை செய்யக்கூடாது என்று கூறப்படுகிறது. ஆண்களைப் போலவே பெண்களும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்பதும், ஆண்களைப் போலவே ஹஜ் செய்யவேண்டுமென்பதும் கூறப்படுகிறது. ஒரு பெண் விற்பதை வாங்கலாம் என்றும் அனுமதிக்கிறது. ஒரு பெண் தானம் கொடுக்கலாம் என்றும் சொல்கிறது. ஒரு பெண் தன்னிடம் உள்ள அடிமைகளை தானே விற்றுக்கொள்ளலாம், அல்லது விடுவிக்கலாம் என்றும் சொல்கிறது.
முடிவு:
ஆண்களும் பெண்களும் ஒரு சில விஷயங்களில் ஒன்றாக இருக்கிறார்கள், ஒரு சில விஷயங்களில் வேறுபட்டு இருக்கிறார்கள். ஆகவே இஸ்லாமின் சட்டம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமாக இல்லை. இந்த வித்தியாசங்கள் அல்லாவின் கருணையினால் உண்டானவை என்று முஸ்லீம் கருதுகிறான். ஆனால் ஆணவம் மிகுந்த காபிர் இதனை அநீதியாகவும், அடக்குமுஇறையாகவும் பார்க்கிறான். ஆணும் பெண்ணும் சமமானவை என்று வலியுறுத்துகிறான். எப்படி ஒரு ஆண் ஒரு குழந்தையை வயிற்றில் வைத்து பெற்று பாலூட்ட முடியும் என்று அவனிடம் சொல்லச்சொல்லுங்கள். பெண்களுக்கு இருக்கும் பலவீனங்களை அவன் உதாசீனம் செய்கிறான். மாதவிடாய் காலத்தில் பெண் ரத்தப்போக்கு ஏற்பட்டு கிடக்கிறாள் என்று சொன்னால், அவன் நிதர்சனத்தில் தன் தலையை முட்டிக்கொள்கிறான். ஆனால் முஸ்லீம் தன் மார்க்கத்தில் அமைதியாக அல்லாவின் ஆணையை ஏற்று நடக்கிறான்.
And Allaah knows best.
Sheikh Muhammed Salih Al-Munajjid (www.islam-qa.com)
#—-# மொழிபெயர்ப்பு முற்றும் #—-#
என்னுரை:
1) பெண்களுக்கும் ஆண்களுக்கும் எந்த விதத்திலும் பொது அறிவு , அறிவுத்திறன் (IQ) ஆகியவை வித்தியாசப்படவில்லை என்பதை பல நூற்றாண்டுகளாக இதை கணக்கிட்டு வரும் இந்திய, அமெரிக்க, ஐரோப்பிய பல்கலைக்கழங்களின் முடிவுகள் காட்டுகின்றன. பெண்கள் மீது திணிக்கப்பட்டிருக்கும் ஏராளமான வீட்டு வேலைகள் காரணமாகவும், ஆண்களின் “ஆண் என்ற அகம்பாவம்” காரணமாகவும் பல வேலைகள் ஆண்களால் பார்க்கப்படாமல் பெண்களின் வேலைகள் அதிகரித்திருக்கின்றன. இதனால், பெண்களால் வீட்டுக்கு வெளியே பல துறைகளில் தேவையான நேரம் செலவிடப்படாமல் பெண்களின் எண்ணிக்கை இந்த அறிவுத்துறைகளில் குறைவாக இருக்கிறது. தமிழகத்திலும் இந்தியாவிலும் பெண்களின் தேர்வு விகிதம் ஆண்களை விட அதிகம். இதுவெல்லாம் அல்லா வேஷம் போட்ட முகம்மதுவுக்கு தெரியாமல் இருந்திருக்கிறது. இன்றைக்கு பல துறைகளில் பெண்கள் சோபிக்கிறார்கள்.
2) இங்கே அல்லாவுக்கு எல்லாம் தெரியும் ( And Allaah knows best. ) என்று அடிக்கடி முஸ்லீம் பக்கங்களில் எழுதுவார்கள். இதற்கு காரணம், எதனை தர்க்க ரீதியாகவும், அறிவுரீதியாகவும் நியாயப்படுத்த முடியாதோ அதனை பற்றி பேசும்போது முஸ்லீம்கள் முஸ்லீமல்லாவர்கள் எல்லார் வாயையும் அடைக்க உபயோகப்படுத்தப்படும் வார்த்தை. எல்லாம் அல்லாவுக்கு (முகம்மதுவுக்கு) தெரியும் வாயை மூடிக்கொண்டு போ என்று அர்த்தம்.
3) மாதவிடாய் ஒரு நோய் என்று அடிக்கடி ஹதீஸில் வருகிறது. அது ஒரு நோயல்ல என்பது அல்லா வேஷம் போட்ட முகம்மதுவுக்கு தெரியவில்லை.
4) ஒரு காஃபிர் பெண்ணான இந்திரா காந்தி தலைமையில் இந்தியா பாகிஸ்தானை இரண்டு முறை தோற்கடித்தது. அதற்கப்புறமும் பெருந்தன்மையாக அவர் லட்சக்கணக்கான பாகிஸ்தான் வீரர்களை விடுதலை செய்து மரியாதையுடன் அனுப்பி வைத்தார். அப்புறம் என்ன பெண் தலைமையில் இருக்கும் மக்கள் முன்னேற முடியாது என்று ரீல்? அமெரிக்காவில் பல மாநிலங்களில் பெண்கள் கவர்னர்களாக இருக்கிறார்கள். இந்தியாவில் பல மாநிலங்களில் பெண்கள் முதலமைச்சர்களாக இருக்கிறார்கள்/ இருந்திருகிறார்கள். பல ஐரோப்பிய நாடுகளில் பெண்கள் தலைமைப்பதவிகளில் இருக்கிறார்கள். பெண்களை அடக்குமுறைக்கு ஆளாக்கி அவர்களை கொட்டடிக்குள் அடைத்து வைக்கும் எல்லா முஸ்லீம் நாடுகளை விடவும் ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் நன்றாக முன்னேறி சிறப்பாகவே வாழ்கிறார்கள்.
5) உளறலின் உச்சகட்டம் இந்த வார்த்தை “”ஒரு ஆணின் சாட்சியம் இரண்டு பெண்களின் சாட்சியத்துக்கு நிகரானது என்பது உங்களது பொதுப்புத்தியில் உள்ள குறைப்பாட்டுக்கு நிரூபணம். ரமதான் மாதத்திலும் ஒரு சில நாட்களில் மாதவிடாய் காரணமாக தொழுமை செய்யமுடியாது என்பது உங்கள் மதத்தில் உள்ள குறைபாடு” ஒரு ஆணின் சாட்சியம் இரண்டு பெண்களின் சாட்சியத்துக்கு நிகரானது என்று யார் சட்டம் போட்டது? இப்படி சட்டம் போட்டுவிட்டு அதனையே, பெண்ணின் பொதுப்புத்தியில் குறைபாடு என்பதற்கு நிரூபணமாக சொல்ல முடியுமா? உளறல் இல்லை இது? மாதத்தில் சில நாட்கள் தொழுகை செய்யக்கூடாது என்று சட்டம்போட்டுவிட்டு அதனையே மதத்தில் குறைபாடு பெண்கள் மீது பழி போடுவது என்று சொல்வது என்ன அயோக்கியத்தனம்? இயற்கையாக உடலில் நடக்கும் ஒரு விஷயம் அது. இது எப்படி குறைப்பாடாகும்? அயோக்கியத்தனத்தின் உச்சம் இது.
இதற்கு இன்னொரு பரிமாணமும் உண்டு. குரானில் உள்ள பல சட்டங்கள் அல்லா வேஷம் போட்ட முகம்மதுவால் உருவாக்கப்பட்டவை அல்ல என்றும் புரிந்து கொள்ளலாம். நிரூபணமாகச் சொல்ல வேண்டுமென்றால், குரானுக்கு முந்தைய, அந்தப் பெண்கள் கேள்வி கேட்காத பாரம்பரிய அரபிக் கலாச்சாரத்திலிருந்து வர வேண்டும். குரானில் இவனே சொல்லிவிட்டு, அதனையே நிரூபணமாக சொல்லியிருந்தால், அதனை அந்த பெண் கேட்டிருப்பாள் என்றுதான் தோன்றுகிறது. ஆகையால், பாரம்பரிய அரபிக் கலாச்சாரத்தில் மாதவிடாய் காலத்தில் பெண்கள் கோவிலுக்குப் போகக்கூடாது என்பதும், ஒரு ஆணின் சாட்சியம் இரண்டு பெண்களின் சாட்சியத்துக்கு ஈடு என்பதும் இருந்திருக்கும். அதனையே நிரூபணமாகச் சொல்கிறான் முகம்மது. இந்த இரண்டு விஷயங்களும், முகம்மது உளறியதே குரான் என்பதையும், கடவுள் ஒன்றையும் முகம்மதிடம் சொல்லவில்லை என்பதையும் நிரூபிக்கின்றன.
6) சமத்துவம் என்பது எதில் என்ற கேள்வியை கேட்டால் இந்த கேள்விக்கு நேர்மையான பதிலைச் சொல்ல முடியும்.
சட்டத்தின் முன்னால் சமத்துவமா?
கடவுளின் முன்னால் சமத்துவமா?
சமூகத்தின் வாய்ப்பு வசதிகள் முன்னால் சமத்துவமா?
வாழ்வுரிமை சமத்துவமா?
உடலில் சமத்துவமா?
யாரும் உடல் ரீதியான சமத்துவத்தை கேட்கவில்லை. “வேண்டுமானால் ஒரு ஆண் வயிற்றில் பிள்ளை சுமந்து பாலூட்டட்டுமே” போன்ற வாதங்கள் உடல் ரீதியான சமத்துவத்தை யாரேனும் கேட்டால் அவர்களிடம் சொல்லலாம். ஆனால், இந்த வாதத்தை சொல்லி கேள்வியை திசை திருப்பும் முயற்சி.
பெண்கள் கேட்பது சட்டத்தின் முன்னால் சமத்துவம், கடவுளின் முன்னால் சமத்துவம், சமூகத்தின் வாய்ப்பு வசதிகள் முன்னால் சமத்துவம், வாழ்வுரிமை சமத்துவம் ஆகியவை.
இந்த எல்லா விஷயங்களிலும் இஸ்லாம் சமத்துவம் கொடுக்க முடியாது என்று சொல்கிறது.
ஒரு ஆண் விவாகரத்து செய்யலாம் ஆனால் பெண் விவாகரத்து செய்ய முடியாது என்பதன் மூலம் சட்டத்தின் முன் சமத்துவம் இல்லை என்று சொல்கிறது. ஒரு ஆணுக்கு கொடுக்கும் சொத்தில் பாதிதான் பெண்ணுக்கு என்று சொல்வதன் மூலம் சட்டத்தின் முன் சமத்துவம் இல்லை என்று சொல்கிறது.
ஆண் மசூதியில் கும்பிட வேண்டும் பெண் வீட்டில்தான் கும்பிட வேண்டும் என்று சொல்வதன் மூலமும், அநீதியான சட்டங்களை கடவுளின் பெயரில் எழுதியதன் மூலமும் கடவுளின் முன் சமத்துவம் இல்லை என்று சொல்கிறது
ஒரு பெண் சுதந்திரமாக வெளியே சென்று வேலை செய்யக்கூடாது, உறவுக்கார ஆண் இல்லாமல் எங்கேயும் செல்லக்கூடாது என்று சொல்வதன் மூலமும், ஒரு பெண் தலைமைப்பதவிக்கு வரக்கூடாது, நீதிபதியாக ஆகக்கூடாது என்று சொல்வதன் மூலமும் வாழ்வுரிமை சமத்துவத்தை மறுக்கிறது. ஒரு ஆணுக்கு கொடுக்கும் சொத்தில் பாதிதான் பெண்ணுக்கு என்று சொல்வதன் மூலம் வாழ்வுரிமை சமத்துவத்தை மறுக்கிறது. சமூகத்தின் வாய்ப்புக்கள் வசதிகள் முன்னால் சமத்துவத்தை மறுக்கிறது.
இவைகள் நீதிகள் என்றால் இவை யாரின் யாரின் நீதிகள் என்ற கேள்விக்கான பதில் மேற்கண்ட “விளக்கத்திலேயே” இருக்கிறது. அதாவது ஆணையும் பெண்ணையும் சமமாக நடத்தினால் அது ஆணுக்கு நீதியாக இருக்காதாம்!
இன்று அமெரிக்காவிலும், இந்தியாவிலும் ஐரோப்பிய நாடுகளிலும், சீனா போன்ற தென் கிழக்கு பௌத்த நாடுகளிலும் பழைய சட்டங்களை நிராகரித்து, பெண்களுக்கான சமத்துவத்தை சட்டத்திலும், வாழ்வுரிமையிலும், வசதி வாய்ப்புகளிலும் சொத்துரிமையிலும் கொடுத்திருக்கிறார்கள். இந்த நாடுகள் இஸ்லாமிய நாடுகளை விட சிறப்பாகவே இருக்கிறார்கள். ராணுவ வலிமையோடும், அறிவியல் திறத்திலும், வாழ்க்கை வசதிகளிலும் நன்றாகவே வாழ்கிறார்கள்.
இஸ்லாமிய சால்ஜாப்பை நன்றாக ஆழமாக படியுங்கள். இன்னொன்று புலப்படும்.
பெண்களுக்கு சமத்துவத்தை மறுக்க எழுதப்பட்ட இதே வரிகளை வைத்து, மக்களில் ஒரு சாரார் சிறந்தவர்கள், மறு சாரார் தாழ்ந்தவர்கள் என்று விளக்கம் அளிக்கவும் முடியும். ஏற்கெனவே ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் மூலம், எவ்வாறு முகம்மது குரேஷி ஜாதிவெறியும் அரபு இன வெறியும் கொண்டு பேசியிருக்கிறான் என்று காட்டியிருக்கிறேன். எவ்வாறு ஹதீஸ்களில் தீண்டாமை போதிக்கப்படுகிறது என்பதையும் எழுதியிருக்கிறேன். இதுவரை யாருமே மறுக்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்டுகிறேன்.
இன்று தமிழ்நாட்டில் ஜாதி காரணமாக மரியாதை கொடுப்பது வெகுவாக குறைந்துவிட்டது என்பது என் கருத்து. தலித்துகளின் வெற்றிகரமான போராட்டங்களால் ஜாதி வெறியையும் ஜாதி உணர்வையும் குறைத்து வருகிறார்கள். ஆனாலும், தலித்துகள் அவ்வாறு மரியாதை இல்லை என்று உணரும் பட்சத்தில், கிரிஸ்துவத்துக்கு போனாலோ, பௌத்தத்துக்குப் போனாலோ மரியாதை நிச்சயம் கிடைக்கும். அதே வேளையில் சுதந்திரமும் இருக்கும். ஒரு வேளை அந்த மதத் தத்துவங்கள் சரியில்லை எனக் கருதினால் அந்த மதங்களை விட்டு நீங்கவும் சுதந்திரம் உண்டு. ஆனால் இஸ்லாமில் சேர்ந்தால், அதன் விஷத்தை புரிந்து கொண்டாலும், நம் குழந்தைகளை காப்பாற்றுவதற்காக அந்த மதத்திலிருந்து விலக நினைத்தாலும் விலக முடியாது. உங்கள் குழந்தைகளோடு சேர்த்து கொல்லப்படுவீர்கள். அது ஷாரியா சட்டங்களில் ஒன்று.
குரேஷி ஜாதியினர் மேலானவர்கள் என்று அல்லாவின் தூதர் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார், மற்றவர்கள் எல்லோரும் குரேஷி ஜாதியினருக்கு தொண்டு செய்ய வேண்டியவர்கள். குரேஷி ஜாதியினர் இல்லாத இடங்களில் அரபியர்களுக்கு மற்ற இனத்தினர் தொண்டு செய்ய வேண்டும், அரபி கலாச்சார உடையை உடுத்த வேண்டும், அரபி மொழியை பேச வேண்டும், அரபி மொழியில் பெயர் வைத்துகொள்ள வேண்டும் என்பதெல்லாம் இன்று அதிகாரப்பூர்வமாகவே உலகெங்கும் உள்ள முஸ்லீம்களிடையே பரப்பப்படுகிறது.
“அரபிகள் அரபிகளல்லாதவர்களுக்கு மேலானவர்கள் அல்ல” என்று நபியின் இறுதி உரையை தமிழ்நாட்டு முஸ்லீம் முல்லாக்கள் காட்டலாம். அரபிகள் அரபிகளுக்கு மேலானவர்கள் இல்லை என்று இஸ்லாம் போதிக்கிறது என்று இவர்கள் பிரச்சாரம் செய்வது ஒரு பச்சை பொய்.
ஷியா பிரிவினர் காட்டும் அந்த இறுதி உரையும், சுன்னி பிரிவினர் காட்டும் இறுதி உரையும் வெவ்வேறு. “குரானின் ஒரே ஒரு எழுத்து கூட சமத்துவத்தை கோரவில்லை” என்று இந்த கட்டுரையாளரான Sheikh Muhammed Salih Al-Munajjid அவர்களும் சொல்கிறார். சமத்துவம் பற்றி சொல்லி ஏமாற்றக்கூடிய ஒரே ஒரு வரி இறுதி உரையில் இருப்பதாக சொல்லப்படும் “அரபிகள் அரபிகளல்லாதவர்களுக்கு மேலானவர்கள் அல்ல” என்பது பெர்ஷியர்களான ஷியாக்கள் எழுதிக்கொண்ட வரி என்பது பல சுன்னி இஸ்லாமிய அறிஞர்களின் கருத்து. முக்கியமாக, நபியின் இறுதி உரை குரானில் இல்லை. அது மிகவும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் தொகுதி என கருதப்படும் அல்-புகாரியிலும் இல்லை. புகாரி ஒரு பெர்ஷியர் என்பது ஒரு செய்தி. மிகுந்த நேர்மையாளர் என்று இஸ்லாமிய அறிஞர்களால் கூறப்படும் அவரே அந்த உரையை தன் ஹதீஸ் தொகுதியில் இணைக்கவில்லை. அந்த இறுதி உரையே பின்னால் இட்டுக்கட்டப்பட்ட ஒன்று என்பது பல இஸ்லாமிய அறிஞர்களே சொல்வது. ஆகவே, இன்று உதாசீனம் செய்யப்படும் பல பொய் ஹதீஸ்களில் ஒன்றாக அதுவும் போடப்பட்டு, குரேஷி ஜாதியினரே மேலானவர்கள் மற்றவர்கள் எல்லோரும் அவர்களுக்கு தொண்டு செய்யவேண்டிய கடமைப் பட்டவர்கள் என்று முகம்மதின் உரையாக பரப்பினால், யார் என்ன எதிர்த்துச் சொல்ல முடியும்?
அரபிகள் அரபிகளல்லாதவர்களுக்கு மேலானவர்கள் இல்லையென்றால் ஏன் இப்படிப்பட்ட ஒரு அடிமைக் கலாச்சாரம் உலகெங்கும் உள்ள முஸ்லீம்களிடம் திணிக்கப்படுகிறது? நடைமுறையை பாருங்கள். ஏன் அரபி பெயர் வைத்துகொள்ள வேண்டும்? ஏன் அரபி மொழியை கற்றுக்கொள்ள வேண்டும், அரபியில் பேச வேண்டும், மற்ற மொழிகள் மக்ரூ என்றும் பிரச்சாரம் செய்யப்பட வேண்டும்? தமிழ்நாட்டு தீவிரவாத முஸ்லீம்கள் ஏன் அரபி உடையை பெருமையாக அணிகிறார்கள்? ஏன் தமிழில் குழந்தைகளுக்கு பெயர் வைத்து, அரபி கலக்காத சுத்த தமிழில் கடவுள் என்று விளித்து, அரபி கலக்காத சுத்த தமிழில் இறைவனை வழிபட்டால் இறைவன் அருளமாட்டாரா? ஏன் தமிழ் மொழிபெயர்ப்பு குரானில் எத்தனை அரபி வார்த்தைகள் இருக்கின்றன என்று பாருங்கள். அரபிகள் அரபிகளுக்கு மேலானவர்கள் இல்லை என்று இஸ்லாம் போதிக்கிறது என்று இவர்கள் பிரச்சாரம் செய்வது ஒரு பச்சை பொய்.
“(அல்லாஹ்) உங்களில் சிலரைவிட சிலரை மேலே உயர்த்தினான்” 6.165
சட்டத்தின் முன் சமம் என்பது இஸ்லாமிய சட்டத்தில் என்றுமே இருந்ததில்லை. நான் முன்னமே குறிப்பிட்டிருந்தது போல, இன்றும், சவூதி அரேபியா மற்றும் இதர இஸ்லாமிய நாடுகளில் எல்லோரும் ஒப்புக்கொண்ட ஷாரியா சட்டப்படி முஸ்லீம் ஆணுக்கு ஒரு நீதி, முஸ்லீம் பெண்ணுக்கு ஒரு நீதி, காபிர் ஆணுக்கு ஒரு நீதி, காபிர் பெண்ணுக்கு ஒரு நீதி என்பதுதான் நடைமுறை. இந்தியாவில் சமத்துவ பம்மாத்து பண்ணி தலித்துகளை பலிகடா போல பயன்படுத்திக்கொள்ள, பெட்ரோ டாலருக்காக, இல்லாத சமத்துவ மிட்டாயை காண்பித்து ஏமாற்றி வருகிறார்கள்.
இந்த பூமியில் தோன்றி மறைந்த எத்தனையோ பொய் மதங்களில், வன்முறை மதங்களில் ஒன்றுதான் இஸ்லாம். இதன் மீது பூசப்பட்ட சகிப்புத்தன்மை மீறி அடிக்கும் சாக்கடை நாற்றத்தைத்தான் டெல்லியில் குண்டு வெடிப்புகளாகவும், கோயம்புத்தூரில் குண்டு வெடிப்புகளாகவும் கலவரங்களாகவும், வன்முறையாகவும் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இந்த வன்முறை மதம் உலகத்திலிருந்து அழிந்தால் உண்மையான ஆன்மீகத்துக்கும், மக்களின் நல்லுறவுக்கும் நல்லது.
#—————#
