இஸ்லாமின் இரண்டு முகங்கள் -அபுல் காஸெம்
இஸ்லாமின் இரண்டு முகங்கள் -
அபுல் காஸெம்
செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு சிறுபான்மையாக முஸ்லீம்கள் வாழும் நாடுகளில், குரானிலிருந்து முத்துக்களை கண்டுபிடித்து இஸ்லாம் என்பது மடைதிறந்த வெள்ளம் போல கருணை பொங்கும் மதம் என்று காட்ட பல முயற்சிகள் எடுத்துக்கொள்ளப்பட்டு வருகின்றன. “மெக்கா வசனங்கள்” பகுதியில் இருக்கும் ஒரு சில மென்மையான வரிகளை எடுத்துக்காட்டப்படுகிறது. குரான் முழுக்க இருக்கும் காட்டுமிராண்டித்தனமான வசனங்களையும் மெதீனா வசனங்கள் என்ற பிற்கால வசனங்களில் இருக்கும் சகிப்புத்தன்மை இல்லாத மன்னிக்க முடியாத குரூரமான வசனங்களை மொழுக்கடித்தும் பேசப்படுகிறது. அப்படிப்பட்ட வசனங்கள் யாராலும் எடுத்துக்காட்டப்பட்டால், அது பார்க்கவேண்டிய சூழ்நிலையை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் ‘those verses are out of context’ என்றும், அந்த வரிகள் இவர்களை சுற்றி இருக்கும் பெரும்பான்மை மக்களுக்கு பொருந்தாது என்றும் பேசப்படுகிறது. மேற்கிலும் சிறுபான்மையாக வாழும் இடங்களிலும் இவ்வாறு முஸ்லீம்கள் பேசுவது திருடன் போலீஸ் விளையாட்டுதான். முஸ்லீமல்லாதவர்கள் உண்மையான இஸ்லாமைப் பற்றி தெரிந்துகொள்வது மிக முக்கியம்.
முஸ்லீம்கள் சிறுபான்மையாக வாழும்போது, செத்துஇப்போன மெக்கா இஸ்லாமை அப்பாவி முஸ்லீமல்லாதவர்களிடமும், அரைகுறை முஸ்லீம்களிடமும் பேசி குரானின் பெருமைகளை பேசுவார்கள். இந்த வசனங்கள் நீக்கப்பட்ட வசனங்கள் என்ற உண்மையைச் சொல்ல மாட்டார்கள். மெக்கா வசனங்களை நஸ்க் (நீக்கம்) செய்து உருவாக்கிய மெதீனா இஸ்லாமின் முகத்தை கவனத்துடன் மறைப்பார்கள். இஸ்லாமிஸ்டுகளின் போர்த்தந்திரம் மிகவும் தெளிவானது.
* சிறுபான்மையாக வாழும்போதும், அல்லது வலிமை இல்லாமல் இருக்கும்போதும் மெக்கா இஸ்லாமை பின்பற்றுவது
* இஸ்லாமிய சொர்க்கங்களை நிர்மாணம் செய்தபின்னாலோ, அல்லது முஸ்லீம்கள் பெரும்பான்மை ஆனபின்னாலோம், மெதீனா இஸ்லாம் அல்லது உண்மையான இஸ்லாமை பின்பற்றுவது.
இஸ்லாமின் இந்த இரண்டு முகங்களை எவ்வளவு சீக்கிரம் மனித குலம் கண்டுகொள்கிறதோ அவ்வளவு சீக்கிரம் இஸ்லாமிய பயங்கரவாதத்துக்கு ஒரு முடிவை கொண்டுவரமுடியும்.
உயிருள்ள உண்மையான மெதீனா இஸ்லாமை பற்றி நமக்கு என்ன தெரியும்? இதோ பதில்.
உண்மையான இஸ்லாமைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால், குரானை காலவரிசைப்படி படிக்க வேண்டும். அது பிரசுரம் ஆகியிருக்கும் வரிசைப்படி படிக்காமல், எந்த வரிகள் எப்போது வந்தன என்ற காலவரிசைப்படி படிக்கும்போது நமக்கு தூக்கிவாரிப்போடும். இவ்வாறு காலவரிசைப்படி படிக்கும்போது எந்த வரிகள் காலத்தால் முந்தையவை, எந்த வரிகள் காலத்தால் பிந்தையவை, காலத்தால் முந்தைய எந்த குரான் வரிகளை, காலத்தால் பிந்திய குரான் வரிகள் நீக்கம் (நஸ்க்) செய்கின்றன என்று தெரிந்துகொள்ளலாம். எந்த வரி எப்போது சொல்லப்பட்டது என்று தெரிந்துகொள்ளாமல் குரானை புரிந்துகொள்ள முயற்சிப்பது வீண். ஏனெனில், குரானின் பல வரிகள் மற்ற வரிகளால் நீக்கம் செய்யப்பட்டுவிட்டன.
குரானே இந்த முறையை கீழ்க்கண்ட வரிகளில் பேசுகிறது.
God does not abrogate any verse but substitutes something similar or better…2:106
“நமது வசனங்களிலே சிலவற்றை நீக்குகிறோம், சிலவற்றை மறக்கும்படி செய்கிறோம். அதன் இடத்திலே, அதே போன்றதாகவோ அதனைவிட சிறப்பானதாகவோ கொண்டுவருகிறோம்” (2:106)
God removes (abrogates?) what He wills…13:39
13:39 (எனினும்,) தான் நாடியதை (அதிலிருந்து) அல்லாஹ் அழித்து விடுவான். (தான் நாடியதை அதில்) நிலைத்திருக்கவும் செய்வான் - அவனிடத்திலேயே உம்முல் கிதாப் (மூலப் பதிவேடும்) இருக்கிறது.
God substitutes one revelation with another; God has the mother of the Book…16:101
16:101 (நபியே!) நாம் ஒரு வசனத்தை மற்றொரு வசனத்தின் இடத்தில் மாற்றினால், (உம்மிடம்) ‘நிச்சயமாக நீர் இட்டுக்கட்டுபவராக இருக்கின்றீர்” என்று அவர்கள் கூறுகிறார்கள்: எ(ந்த நேரத்தில், எ)தை இறக்க வேண்டுமென்பதை அல்லாஹ்வே நன்கறிந்தவன், எனினும் அவர்களில் பெரும்பாலோர் (இவ்வுண்மையை) அறிய மாட்டார்கள்.
மேற்கண்ட வரிகள் பலரிடம் பல குழப்பங்களை உருவாக்கியிருக்கின்றன. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். அல்லா தன் மனத்தை அடிக்கடி மாற்றிக்கொள்வார். அந்த மாற்றத்தின் விளைவு பயங்கரமானது. இப்படிப்பட்ட மாற்றங்களின் விளைவு பல சமயங்களில் வாழ்வுக்கும் சாவுக்குமான வித்தியாசத்தை கொண்டுவருகின்றது. ஆகவே, எந்த வரிகள் யாருக்கு பொருந்தும் என்றும் எந்த வரிகள் பொருந்தாது என்பதையும் அறிந்துகொள்வது முக்கியமாக அப்பாவி முஸ்லீமல்லாதவர்களுக்கு மிகவும் முக்கியமானது. இந்த வரிகளில் முஇக்கியமானது முஸ்லீமல்லாதவர்களுடன் ஜிகாத் போர் புரிவது பற்றிய வரிகள். எப்போது ஜிகாத் போர்புரிவது தடுக்கப்பட்டது என்பதும் எப்போது ஜிகாத் போர் புரிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்பதும் நாம் தெரிந்துகொள்ளவேண்டும்.
மெக்காவில் சொல்லப்பட்ட வரிகள் வன்முறையற்ற வரிகள். 87 மெக்கா வரிகளும் 27 மெதீனா வரிகளும் இருக்கின்றன. ஆக மொத்தம் 114 சுராக்கள் குரானில் இருக்கின்றன.
மெதீனா வரிகள் போர் புரிவதை குறித்த வசனங்கள். ஏனெனில் மெதீனாவில்தான் அல்லாவிடமிருந்து முஸ்லீமல்லாதவர்களோடு போர் புரிய முகம்மதுவுக்கு ஆணை வந்ததாக சொல்லப்படுகிறது. ஆகவே 87க்குப் பிறகு இருக்கும் வசனங்கள் 87க்கு முந்தைய வசனங்களை மாற்றி எழுதப்பட்டவை என்று புரிந்துகொள்ளலாம்.
இந்த சிறிய கட்டுரையில் எப்படி இந்த குழப்பத்தை நீக்குவது என்று விளக்க முயல்கிறேன்.
ஒவ்வொரு வரிக்கு பின்னாலும் இருக்கும் எண் அதன் காலவரிசை எண்()
இஸ்லாமை முகம்மது பரப்பியதை நான்கு பிரிவுகளாக பிரிக்கலாம்.
இவை
1. அமைதியான முறையில் பரப்புவது
2. தற்காப்புக்காக போரிடுவது
3. கட்டுப்படுத்தப்பட்ட தாக்குதல்
4. கட்டுப்பாடு இல்லாத ஆக்கிரமிப்பு
பகுதி 1. அமைதியான முறையில் பரப்புவது
முக்கியமாக கவனிக்க வேண்டியவை
* மக்காவில் வாழும் விக்கிரக வழிப்பாட்டாளர்களுடன் அமைதியாக சேர்ந்து வாழ்வது
* விக்கிரக வழிப்பாட்டாளர்களையும் போலி முஸ்லீம்களையும் சகித்துக்கொண்டு கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுவது
* யூதர்களும் கிரிஸ்துவர்களும் (வேதப்புத்தகம் அருளப்பட்டவர்கள்) நண்பர்களாக கருதப்படுவது
* முகம்மது ஏறத்தாழ புத்தர் போல அன்பு, மன்னிப்பு, வன்முறையின்றி வாழ்வது, அமைதி ஆகியவற்றை பிரச்சாரம் செய்வது.
* மெக்காவின் விக்கிரக வழிபாட்டாளர்கள் மட்டுமே எதிரி என்று கருதப்பட்டது (எதிரி வரிசையில் ஒரே ஒரு குழுதான் இருக்கிறது)
முக்கியமான வசனங்கள்
கீழ்க்கண்ட மேற்கோள்களில் முக்கியமான பகுதிகள் குறிப்பாக காட்டப்படுகின்றன். (3) என்று இருப்பது காலவரிசையில் மூன்றாவது சுரா என்று குறிக்கிறது.
1. Be patient and bear with those who deny the truth; God will deal with them…73:10, 11 (3)
73:10 அன்றியும், அவர்கள் (உமக்கெதிராகக்) கூறுவதைப் பொறுத்துக் கொள்வீராக. மேலும், அழகான கண்ணியமான - முறையில் அவர்களை விட்டும் வெறுத்து ஒதுங்கி விடுவீராக.
73:11 என்னையும், பொய்ப்பிப்பவர்களாகிய அந்தச் சுக வாசிகளையும் விட்டுவிடும். அவர்களுக்குச் சிறிது அவகாசமும் கொடுப்பீராக.
2. ‘To you is your religion, to me is mine’…109:1- 6 (8)
109:6 உங்களுக்கு உங்களுடைய மார்க்கம் எனக்கு என்னுடைய மார்க்கம்.”
3. Be patient with the evil doers…38:15-17 (38)
38:17 இவர்கள் கூறுவதைப்பற்றிப் பொறுமையுடன் இருப்பீராக
4. Show patience to the pagans…20:130 (42)
20:130 ஆகவே (நபியே!) அவர்கள் சொல்வதை(யெல்லாம்) நீர் பொறுத்துக் கொள்வீராக
5. Don’t be in a haste to fight…19:83, 84 (44)
19:83 காஃபிர்களை (வழி கேட்டில் செல்லும்படித்) தூண்டிக் கொண்டிருப்பதற்காகவே நிச்சயமாக ஷைத்தான்களை நாம் அனுப்பியிருக்கிறோம் என்பதை நீர் பார்க்க வில்லையா?
19:84 எனவே அவர்களுக்காக நீர் அவசரப்படாதீர்! அவர்களுக்கு (வேதனைக்குய தவணையின்) கணக்கை நாம் கணக்கிட்டுக் கொண்டுதானிக்கிறோம்.
6. Be patient with the unbelievers (pagans); God’s way will prevail…20:134, 135 (45)
7. Mohammad is not sent to dispose of people’s affairs…17:54 (50)
நாம் உம்மை அவர்களுக்கு வகீலாக (பொறுப்பாளியாக) அனுப்பவில்லை.
8. God guides those whom He pleases; rewards will be in paradise…10:25, 26 (51)
அவன் நாடியவரை நேர் வழியில் செலுத்துகிறான்.
9. God will call into account the pagans who slander the Qurஒan…15:91-93 (54)
15:91 இந்த குர்ஆனை பலவாறாகப் பிப்போர் மீதும் (வேதனையை இறக்கி வைப்போம்).
10. It is not God’s job to see if people believe the truth or not…6:104 (55)
6:104 நிச்சயமாக உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து ஆதாரங்கள் வந்துள்ளனி எவர் அவற்றை (கவனித்து)ப் பார்க்கிறாரோ அது அவருக்கே நன்மையாகும், எவர் (அவற்றைப்) பார்க்காது கண்ணை மூடிக்கொள்கிறாரோ அது அவருக்கே கேடாகும் ‘நான் உங்களைக் காப்பவன் அல்ல” (என்று நபியே! நீர் கூறும்).
11. Turn away from those rejecting faith and proclaim peace on them…43:88, 89 (69)
43:88 ‘என் இறைவா! நிச்சயமாக இவர்கள் நம்பிக்கை கொள்ளா சமூகத்தாராக இருக்கிறார்கள்” என்று (நபி) கூறுவதையும் (இறைவன் அறிகிறான்).
43:89 ஆகவே, நீர் அவர்களைப் புறக்கணித்து ‘ஸலாமுன்” என்று கூறிவிடும்
12. Invite the unbelievers (pagans) with beautiful preaching and gracious arguments; be patient and do not retaliate…16:125, 126 (70)
16:125 (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்.
13. Leave the unbelievers (pagans) alone…23:54 (74)
23:54 எனவே, அவர்களை ஒரு காலம் வரை தம் அறியாமையிலேயே ஆழ்ந்திருக்க விட்டுவிடும்.
14. Repeal evil with good deeds…23:96 (74)
23:96 (நபியே!) நீர் அழகிய நன்மையைக் கொண்டு தடுத்துக் கொள்வீராக! அவர்கள் வர்ணிப்பதை நாம் நன்கறிவோம்.
15. Leave the unbelievers alone and wait in patience for God to punish them…52:45, 47, 48 (76)
52:45 ஆகவே அச்சத்தால் அவர்கள் உணர்விழக்கும் நாளைச் சந்திக்கும்வரை, அவர்களை விட்டு விடுவீர்களாக.
16. Mohammad is only a warner and not an enforcer…67:26 (77)
67:26 ‘இதைப் பற்றிய ஞானம் நிச்சயமாக அல்லாஹ்விடமே தான் இருக்கிறது. தவிர, நிச்சயமாக நான் தெளிவாக அச்சமூட்டி எச்சாக்கை செய்பவன் தான்” என்று (நபியே!) நீர் கூறும்.
பகுதி 2: தற்காப்புக்காக போரிடுவது
முக்கியமாக கவனிக்க வேண்டியவை
* தன் சீடர்களாக இருக்கும் மிகச்சிறிய குழுவுடன் மெதீனாவுக்கு போவது. (கிபி 622) மெதினாவில் சில ஜாதிகள் முகம்மதுவை தங்கள் தலைவராக ஏற்றுக்கொள்வது.
* உயிர்வாழ்வதற்காக தேவைக்காக மெக்காவிலிருந்து வரும் வியாபார வண்டிகளை முகம்மதுவும் முகம்மதின் கும்பலும் கொள்ளையடிப்பது
* பாதர் போரில் முகம்மது வெற்றி பெறுவது. இது இன்னும் நிறைய வியாபார வண்டிகளை கொள்ளையடிக்க முகம்மதையும் கும்பலையும் தூண்டுவது.
* மெதீனாவில் பல வருடங்கள் இருந்த பின்னால், தற்காப்புக்காக போர் தொடுக்க அல்லா முகம்மதுவுக்கு அனுமதி தருவது
* இப்போது எதிரிகள் மெக்காவின் விக்கிரக வழிபாட்டாளர்களும், போலி முஸ்லீம்களும் (இப்போது எதிரி வரிசை இரண்டாக அதிகரித்திருப்பதை பார்க்கலாம்)
முக்கியமான வசனங்கள்
1. Forgive and overlook the unbelieving Jews; God will take care of them…2:109 (87)
2:109 வேதத்தை உடையவர்களில் பெரும்பாலோர் உண்மை அவர்களுக்கு தெளிவாகத்தொந்த பின்னரும் தங்கள் மனதில் உள்ள பொறாமையினால் நீங்கள் நம்பிக்கை கொண்டபின் காஃபிர்களாக மாற வேண்டுமென விரும்புகிறார்கள். ஆனால் அல்லாஹ்வின் கட்டளை வரும்வரை அவர்களை மன்னித்து, அவர்கள் போக்கிலே விட்டுவிடுங்கள்.
2. Fight defensively the Meccan pagans but if they cease hostility then stop fighting except for the oppressors…2:190-194 (87)
2:190 உங்களை எதிர்த்துப் போர் புரிபவர்களுடன் நீங்களும், அல்லாஹ்வின் பாதையில் போடுங்கள் ஆனால் வரம்பு மீறாதீர்கள் நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை.
3. Fighting against the Meccan pagans is prescribed after the passing of the month of pilgrimage (Zulhaj)…2:216, 217 (87)
2:217 (நபியே!) புனிதமான (விளக்கப்பட்ட) மாதங்களில் போர் பூவது பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள் நீர் கூறும்: ‘அக்காலத்தில் போர் செய்வது பெருங் குற்றமாகும் ஆனால், அல்லாஹ்வின் பாதையை விட்டுத் தடுப்பதும், அவனை நிராகாப்பதும், மஸ்ஜிதுல் ஹராமுக்குள் (வரவிடாது) தடுப்பதும், அங்குள்ளவர்களை அதிலிருந்து வெளியேற்றுவதும் (-ஆகியவையெல்லாம்) அதைவிடப் பெருங் குற்றங்களாகும் ஃபித்னா (குழப்பம்) செய்வது, கொலையைவிடக் கொடியது அவர்களுக்கு இயன்றால் உங்கள் மார்க்கத்திலிருந்து உங்களைத் திருப்பிவிடும் வரை உங்களுடன் போர் செய்வதை நிறுத்த மாட்டார்கள் உங்களில் எவரேனும் ஒருவர் தம்முடைய மார்க்கத்திலிருந்து திரும்பி, காஃபிராக (நிராகாப்பவராக) இறந்துவிட்டால் அவர்களின் நற்கருமங்கள் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் (பலன் தராமல்) அழிந்துவிடும் இன்னும் அவர்கள் நரகவாசிகளாக அந்நெருப்பில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்.”
4. ‘No compulsion in religion’; do not force the defeated enemy to embrace Islam; but they will be thrown in hell…2:256, 257 (87)
2:256 (இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை
5. Spoils of war belongs to God and Mohammad…8:1 (88)
8:1 போல் கிடைத்த வெற்றிப்பொருள்(அன்ஃபால்)களைப் பற்றி உம்மிடம் அவர்கள் கேட்கிறார்கள். (அதற்கு நபியே!) நீர் கூறுவீராக: அன்ஃபால் அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும் சொந்தமானதாகும்
6. Strike terror in the hearts of the unbelievers; cut the necks and finger tips of those who oppose God and Mohammad…8:12, 13 (88)
8:12 (நபியே!) உம் இறைவன் மலக்குகளை நோக்கி: ‘நிச்சயமாக நான் உங்களுடன் இருக்கிறேன். ஆகவே, நீங்கள் முஃமின்களை உறுதிப்படுத்துங்கள் நிராகாப்போன் இருதயங்களில் நான் திகிலை உண்டாக்கி விடுவேன் நீங்கள் அவர்கள் பிடாகளின் மீது வெட்டுங்கள். அவர்களுடைய விரல் நுனிகளையும் வெட்டி விடுங்கள்”
7. When you meet, the unbelievers in hostility attack them and never turn back from them. If you retreat except for a strategic reason then God will
punish you and will send you to hell…8:15-16 (88)
8:15 நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் நிராகாப்போரைப் (போல்) ஒன்று திரண்டவர்களாக சந்தித்தால் அவர்களுக்கு புறமுதுகு காட்டாதீர்கள்.
8. Keep on fighting until the persecution stops and Islam is established; one-fifth of booty belongs to God and Mohammad…8:39-41 (88)
8:39 (முஃமின்களே! இவர்களுடைய) விஷமங்கள் முற்றிலும் நீங்கி, (அல்லாஹ்வின்) மார்க்கம் முற்றிலும் அல்லாஹ்வுக்கே ஆகும்வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்
9. Obey Mohammad, be united and persevere in fighting…8:45, 46 (88)
8:45 ஈமான் கொண்டவர்களே! நீங்கள் (போல் எதியின்) கூட்டத்தாரைச் சந்திப்பீர்களாயின் உறுதியாக இருங்கள்
8:46 இன்னும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள
10. If you defeat the enemy then teach them with treachery and terror; if they ask for peace then give them peace…8:57-61 (88)
8:57 எனவே போல் நீர் அவர்கள்மீது வாய்ப்பைப் பெற்று விட்டால், அவர்களுக்குப் பின்னால் உள்ளவர்களும் பயந்தோடும்படி சிதறடித்து விடுவீராக -
11. Rouse the believers to fight with perseverance, God will help by increasing your strength…8:65 (88)
8:65 நபியே! நீர் முஃமின்களை போருக்கு ஆர்வ மூட்டுவீராக
12. Continue killing and do not take prisoners until the land is subdued then enjoy the war booty…8:67-69 (88)
8:67 பூமியில் இரத்தத்தை ஓட்டாத வரையில் (விரோதிகளை உயிருடன்) சிறைபிடிப்பது எந்த நபிக்கும் தகுதியில்லை.
பகுதி 3. கட்டுப்படுத்தப்பட்ட ஆக்கிரமிப்பு போர்
முக்கியமாக கவனிக்க வேண்டியவை
* மெதீனாவில் இருக்கும் யூதர்கள் தன்னை புது மோஸஸாக ஏற்றுக்கொள்ளும்படி முகம்மது கேட்பது
* முகம்மதை தங்களது புதிய தூதராக ஏற்றுக்கொள்ள யூதர்கள் மறுப்பது
* யூதர்களையும் எதிரி வரிசையில் சேர்த்துவிட்டு அவர்களது கிராமங்களையும் தாக்க ஆரம்பிப்பது.
* இப்போது முகம்மதி எதிரிகள் வரிசையில் விக்கிர வழிபாட்டாளர்கள், போலி முஸ்லீம்கள், யூதர்கள் ஆகியோர். மூன்றாக உயர்கிறது.
* தோற்கடிக்கப்பட்ட யூதர்களுக்கு சிறிய அளவு மன்னிப்பு வழங்குதல். அவர்கள் அறுவடை செய்யும் விவசாயபொஇருட்களில் 50 சதவீதம் முகம்மதிடம்
கொடுத்துவிட்டால் அவர்கள் தங்கள் நிலங்களில் தொடர்ந்து இருக்கலாம் என்று நிபந்தனை.
* இந்த வழியில் முகம்மதிடம் தன்னிடம் இருக்கும் போர் வீரர்களுக்கு தேவையான உணவு மற்றும் செல்வம் சேர்வது.
* உகுத் போரில் (கிபி 623) முகம்மதுவின் முஸ்லீம் படை பலத்த தோல்வியை அடைவது
* 625இல் பலத்த இழப்புகளுக்கு இடையில் (The battle of trench (625 AD) முகம்மது போரில் வெற்றி பெறுவது.
* குதைபா ஒப்பந்தம் (கிபி 626) எழுதப்படுகிறது. இது மெக்காவின் விக்கிரக வழிபாட்டாளர்களுடன் 10 வருட அமைதி ஒப்பந்தத்தை உருவாக்குகிறது. இதன் படி முகம்மது தன்னை பின்பற்றுபவர்களுடன் மெக்காவுக்கு யாத்திரை செல்ல அனுமதி கிடைக்கிறது.
* கைபர் போர் (கிபி 627) நடக்கிறது. இந்த போரில் யூதர்கள் தோற்கிறார்கள். நிபந்தனை இல்லாம சரணடைகிறார்கள். சரணடைந்த 700 ஆண்களையும்
தலையை வெட்டி கொல்ல முகம்மது ஆணையிடுதல். எல்லா பெண்களும் அடிமைப்பெண்களாக விற்கப்படுதல். இவ்வாறு அடிமையாக்கப்பட்ட 17 வயதான
சஃபியாவை தன் மனைவியாக ஆக்கிக்கொள்ளல்.
முக்கியமான வசனங்கள்
1. Martyr’s sins are blotted out and they go to paradise…3:157, 169-171, 195 (89)
3:157 இன்னும், அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் கொல்லப்பட்டாலும் அல்லது இறந்து விட்டாலும், அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும் மன்னிப்பும், ரஹ்மத்தும் அவர்கள் சேர்த்து வைப்பதைவிட மிக்க மேன்மையுடையதாக இருக்கும்.
2. Can take women captives as concubines in addition to wives…33:50 (90)
33:50 நபியே! எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்து விட்டீரோ அந்த உம்முடைய மனைவியரையும், உமக்கு(ப் போல் எளிதாக) அல்லாஹ் அளித்துள்ளவர்களில் உம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும், நாம் உமக்கு ஹலாலாக்கி இருக்கின்றோம்.
3. There is a great reward for fighting against the friends of Satan…4:74-78 (92)
நீங்கள் ஷைத்தானின் நண்பர்களுக்கு எதிராகப் போர் பூயுங்கள்
4. Fight and rouse other believers to fight; God will restrain the fury of the unbelievers…4:84 (92)
4:84 எனவே, நீர் அல்லாஹ்வின் பாதையில் போர் பூவீராக. உம்மைத் தவிர, வேறு யாரையும் நீர் கட்டாயப் படுத்துவதற்கில்லை எனினும் முஃமின்களைத் தூண்டுவீராகி நிராகாப்போன் எதிர்ப்பை அல்லாஹ் தடுத்துவிடுவான்
5. Kill the hypocrites if they turn renegades…4:89 (92)
அவர்கள் புறக்கணித்துவிட்டால் அவர்களை எங்கு கண்டாலும் (கைதியாகப்) பிடித்துக் கொள்ளுங்கள் (தப்பியோட முயல்வோரைக்) கொல்லுங்கள் - அவர்களிலிருந்து எவரையும் நண்பர்களாகவோ, உதவியாளர்களாகவோ எடுத்துக் கொள்ளாதீர்கள்.
6. Higher grade for fighting for God…4:95, 96 (92)
4:95 ஈமான் கொண்டவர்களில் (நோய், பலஹீனம், முதுமை, பார்வையிழத்தல் போன்ற) எந்தக் காரணமுமின்றி (வீட்டில்) உட்கார்ந்திருப்பவர்களும், தங்களுடைய சொத்துகளையும், தங்களுடைய உயிர்களையும் (அர்ப்பணித்தவர்களாக) அல்லாஹ்வின் பாதையில் போர் பூபவர்களும் சமமாக மாட்டார்கள்
7. Guaranteed reward for fighting in the cause of God…4:100 (92)
4:100 இன்னும் எவர் அல்லாஹ்வின் பாதையில் நாடு கடந்து செல்கின்றாரோ, அவர் பூமியில் ஏராளமான புகலிடங்களையும், விசாலமான வசதிகளையும் காண்பார்;
8. Whether a fighter kills or is killed, he is admitted in paradise to reside there permanently…22:58, 59 (103)
22:58 இன்னும், எவர்கள் அல்லாஹ்வுடைய பாதையில் (தம் இருப்பிடங்களை விட்டு) ஹிஜ்ரத் செய்து பின்னர் கொல்லப்பட்டோ அல்லது இறந்தோ விடுகிறார்களோ, அவர்களுக்கு அல்லாஹ் அழகிய உணவை நிச்சயமாக அளிக்கின்றான்
9. Struggle for God’s cause…22:78 (103)
22:78 இன்னும் நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் அவனுக்காக போராட வேண்டிய முறைப்படி போராடுங்கள்
10. Rewards for Jihad …22:58 (105)
22:58 இன்னும், எவர்கள் அல்லாஹ்வுடைய பாதையில் (தம் இருப்பிடங்களை விட்டு) ஹிஜ்ரத் செய்து பின்னர் கொல்லப்பட்டோ அல்லது இறந்தோ விடுகிறார்களோ, அவர்களுக்கு அல்லாஹ் அழகிய உணவை நிச்சயமாக அளிக்கின்றான்
11. Can’t lag behind in fighting for God…48:15-16 (111)
48:16 பின் தங்கிவிட்ட நாட்டுப்புறத்து அரபிகளிடம்: ‘நீங்கள் சீக்கிரத்தில் மிக்க பலசாலிகளான ஒரு சமூகத்தாடம் (அவர்களை எதிர்த்துப் போட) அழைக்கப்படுவீர்கள், அவர்களுடன் நீங்கள் போட வேண்டும் அல்லது அவர்கள் முற்றிலும் பணிய வேண்டும், அப்போது நீங்கள் வழிப்பட்டு நடப்பீர்களானால், அல்லாஹ் உங்களுக்கு அழகிய நற்கூலியைக் கொடுப்பான் ஆனால் இதற்கு முன் நீங்கள் (போடாமல்) பின்னடைந்தது போல் (இப்பொழுதும்) நீங்கள் பின்வாங்குவீர்களாயின், அவன் உங்களை நோவினை தரும் வேதனையாக வேதனை செய்வான்” என்று (நபியே!) நீர் கூறும்.
பகுதி 4. இஸ்லாமை பரப்ப ஆக்கிரமிப்பு ஜிகாத் போர்.
இப்போது வெளிப்படையாக எல்லா முஸ்லீமல்ல்லாதவர்கள் மீதும் போர் என்று அறிவிக்கப்படுகிறது. மெக்காவை விக்கிரகவழிபாட்டாளர்களிடமிர்ந்து கைப்பற்றிய பின்னால் மெக்காவில் திரும்ப நுழைந்ததிலிருந்து கிபி 630இல் ஆரம்பித்தது. இதுதான் எல்லா முஸ்லீம்களுக்கும் தற்போதைய உண்மையான இஸ்லாம்.
முக்கியமாக கவனிக்க வேண்டியவை
* எல்லா முஸ்லீமல்லாதவர்கள் மீதும் ஆக்கிரமிப்பு தாக்குதல் நடத்த முஸ்லீம்களுக்கு அல்லாவின் ஆணை
* விக்கிரக வழிபாட்டாளர்களை கொல்லவேண்டும். யூதர்களையும் கிரிஸ்துவர்களையும் ஜிஸியா வரி கொடுக்க வைத்து கீழ்ப்படியவைத்து அடக்க வேண்டும்.
* தாபுக் போர் (கிபி 630) கிரிஸ்துவர்களுக்கு எதிரான போர்
* உலகம் இரண்டாக பிரிக்கப்படுகிறது. தாருல் இஸ்லாம் (இஸ்லாமிய உலகம்) தாருல் ஹராப் (போருக்கான உலகம்)
* தாருல் ஹராபில் போர் புரிந்து தாருல் இஸ்லாமாக மதமாற்றம் செய்ய முஸ்லீம்கள் ஜிகாத் போர் புரிய வேண்டும்
* இதுதான் குரானின் இறுதி போதனை. இதுதான் இன்று சட்டப்பூர்வமான இஸ்லாம். இன்றும் எதிர்காலம் முழுமைக்கும்
* இப்போது கிரிஸ்துவர்கள் எதிரி வரிசையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள் (இப்போது எதிரி வரிசையில் 4 குழுக்கள்)
* வாளின் வசனம் 9.5 என்று வழங்கப்படும் வசனம்(verse of the sword), முஸ்லீமல்லாதவர்களுகு கருணை, அன்பு, சகிப்புத்தன்மை மன்னிப்பு ஆகிய அனைத்தையும் நீக்கி நஸ்க் செய்கிறது.
முக்கியமான வசனங்கள்
1. Any religion other than Islam is not acceptable…3:85 (89)
3:85 இன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவாடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது
2. Kill (execute by beheading)/crucify/torture who opposes Mohammad…5:33 (112)
5:33 அல்லாஹ்வுடனும் அவன் தூதருடனும் போர் புரிந்து, பூமியில் குழப்பம் செய்து கொண்டு திபவர்களுக்குத் தண்டணை இதுதான் (அவர்கள்) கொல்லப்படுதல், அல்லது தூக்கிலிடப்படுதல், அல்லது மாறுகால் மாறு கை வாங்கப்படுதல், அல்லது நாடு கடத்தப்படுதல்
3. Do not make friendship with the Jews and the Christians…5:51 (112)
5:51 முஃமின்களே! யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் உங்களுடைய பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள்.
4. After giving four months notice break all treaties with the pagans that they did not keep; those treaties with the pagans that they kept are to be
honored to their full term; in future make no more peace treaties with the pagans and kill all pagans who do not accept Islam…9:1-6 (113)
9:1 (முஃமின்களே!) முஷ்க்குகளில் (இணைவைத்து வணங்குபவர்களில்) எவர்களுடன் நீங்கள் உடன்படிக்கை செய்துள்ளீர்களோ, அவர்களிடமிருந்து அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் விலகிக் கொண்டனர்.
9:2 நீங்கள் நான்கு மாதங்கள் (வரையில்) இப் பூமியில் சுற்றித் தியுங்கள். நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வைத் தோற்கடிக்க முடியாதவர்கள் என்பதையும், நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களை இழிவு படுத்துவான் என்பதையும் நீங்கள் (உறுதியாக) அறிந்து கொள்ளுங்கள்.
9:3 அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் முஷ்க்குகளுடன் (செய்திருந்த உடன்படிக்கையை) விட்டும் நிச்சயமாக விலகிக் கொண்டார்கள் என்பதை ஹஜ்ஜுல் அக்பர் (மாபெரும் ஹஜ்ஜுடைய) நாளில் மனிதர்களுக்கு அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் வெளிப்படையாக அறிவிக்கின்றனர் எனவே நீங்கள் (இணை வைப்பதிலிருந்து மனந்திருந்தி) விலகிக் கொண்டால் அது உங்களுக்கே நலமாகும் நீங்கள் (சத்தியத்தை) புறக்கணித்து விட்டால் நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வைத் தோற்கடிக்க முடியாதவர்கள் என்பதை (உறுதியாக) அறிந்து கொள்ளுங்கள். (நபியே!) நிராகாப்போருக்கு நோவினை தரும் வேதனை இருக்கிறது என்று நீர் நன்மாராயம் கூறுவீராக.
9:4 ஆனால், நீங்கள் உடன்படிக்கை செய்து கொண்ட இந்த முஷ்க்குகளில், எதையும் குறைத்துவிடாமலும், உங்களுக்கு விரோதமாக எவருக்கும் உதவி செய்யாமலும் இருக்கின்றார்களோ அவர்களைத் தவிர: அவர்களுக்கு அவர்களின் உடன்படிக்கையை அவர்களின் காலக் கெடுவரையில் பூரணமாக நிறைவேற்றுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோரை நேசிக்கின்றான்.
9:5 (போர் விலக்கப்பட்ட துல்கஃதா, துல்ஹஜ்ஜு, முஹர்ரம், ரஜபு ஆகிய நான்கு) சங்ககைமிக்க மாதங்கள் கழிந்து விட்டால் முஷ்க்குகளைக் கண்ட இடங்களில் வெட்டுங்கள், அவர்களைப் பிடியுங்கள் அவர்களை முற்றுகையிடுங்கள், ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களைக் குறிவைத்து உட்கார்ந்திருங்கள் - ஆனால் அவர்கள் (மனத்திருந்தி தம் பாவங்களிலிருந்து) தவ்பா செய்து மீண்டு(இஸ்லாமுக்கு மதம் மாறி), தொழுகையையும் கடைப்பிடித்து ஜகாத்தும் (முறைப்படிக்) கொடுத்து வருவார்களானால் (அவர்களை) அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
5. Pagans who accept Islam are brothers of Muslims; those who break the agreement fight them…9:11, 12, 14, 15 (113)
9:11 ஆயினும் அவர்கள் தவ்பா செய்து (மனந்திருந்தி தம் தவறுகளிலிருந்து விலகி) தொழுகையைக் கடைப்படித்து, ஜகாத்தையும் (முறையாக) கொடுத்து வருவார்களானால், அவர்கள் உங்களுக்கு மார்க்கச் சதோதரர்களே
9:14 இல்லையேல் நீங்கள் அவர்களுடன் போர் புரியுங்கள்
6. Do not make friend or seek protection from the unbelievers (includes pagans, hypocrites, Jews and the Christians)…9:16 (113)
9:16 (முஃமின்களே!) உங்களில் யார் (அல்லாஹ்வின் பாதையில்) போர் செய்தனர் என்பதையும் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும், முஸ்லீம்களையும் தவிர (வேறு எவரையும்) அந்தரங்க நண்பர்களாக ஆக்கிக் கொள்ளவில்லை
7. Unbelievers should not visit mosques or maintain the mosques of God; they will go to hell…9:17 (113)
9:17 ‘குஃப்ன்” மீது தாங்களே சாட்சி சொல்லிக் கொண்டிருக்கும், இந்த முஷ்க்குகளுக்கு அல்லாஹ்வின் மசூதிகளை பாபாலனம் செய்ய உமையில்லை
8. Those who do Jihad are the highest in rank; they will dwell in paradise…9:19-22 (113)
9:19 (ஈமான் கொள்ளாத நிலையில்) ஹாஜிகளுக்குத் தண்ணீர் புகட்டுவோரையும் கஃபத்துல்லாவை (புனிதப்பள்ளியை) நிர்வாகம் செய்வோரையும் அல்லாஹ்வின் மீதும் இறுதிநாள் மீதும் ஈமான் கொண்டு, அல்லாஹ்வின் பாதையில் ஜிகாத் போர் புரிந்தோருக்குச் சமமாக ஆக்கிவிட்டீர்களா? அல்லாஹ்வின் சமூகத்தில் (இவ்விருவரும்) சமமாக மாட்டார்கள்
9. The unbelievers are unclean, forbid them to enter Kaba…9:28 (113)
9:28 முஸ்லீம்களே! நிச்சயமாக இணை வைத்து வணங்குவோர் அசுத்தமானவர்களே. ஆதலால், அவர்களின் இவ்வாண்டிற்குப் பின்னர் புனிதமான காபாவை அவர்கள் நெருங்கக் கூடாது
10. Fight against the Jews and the Christians until they are subdued and pay the Jizya tax with submission; God’s curse is on them…9:29-31 (113)
9:29 வேதம் அருளப்பெற்றவர்களில் எவர்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஈமான் கொள்ளாமலும், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஹராம் ஆக்கியவற்றை ஹராம் எனக் கருதாமலும், உண்மை மார்க்கத்தை ஒப்புக் கொள்ளாமலும் இருக்கிறார்களோ. அவர்கள் (தம்) கையால் கீழ்ப்படிதலுடன் ஜிஸ்யா (என்னும் கப்பம்) கட்டும் வரையில் அவர்களுடன் போர் பூயுங்கள்.
11. If you do not fight in the cause of God with whatever you have got then God will punish you with a serious punishment…9:38, 39, 41 (113)
9:39 நீங்கள் (அவ்வாறு புறப்பட்டுச்) செல்லவில்லையானால், (அல்லாஹ்) உங்களுக்கு நோவினை மிக்க வேதனை கொடுப்பான்
9:41 நீங்கள் சொற்ப(மான போர்த் தளவாட)ங்களைக் கொண்டிருந்தாலும் சா, நிறைய(ப் போர்த் தளவாடங்களைக்) கொண்டிருந்தாலும் சா, நீங்கள் புறப்பட்டு, உங்கள் பொருட்களையும், உயிர்களையும் கொண்டு அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் பூயுங்கள்
12. If you fight for God then expect either martyrdom or paradise. The unbelievers can expect only punishment from God…9:52 (113)
9:52 (நபியே!) நீர் கூறுவீராக: “(வெற்றி அல்லது வீர மரணம் ஆகிய) இரு அழகிய நன்மைகளில் ஒன்றைத் தவிர வேறு எதையும் நீங்கள் எங்களுக்காக எதிர்பார்க்க முடியுமா?”
13. Those who are able to fight for God but do not do so are rejected by God…9:90-96 (113)
9:90 கிராம வாசிகளில் சிலர் உம்மிடம் புகல் சொல்லிக் கொண்டு, (போல் கலந்து கொள்ளாமலிருக்கத்) தங்களுக்கு அனுமதி அளிக்கப்பட வேண்டுமென்று கேட்க வந்தனர் இன்னும் அல்லாஹ்விடமும், அவன் தூதாடமும் பொய்யுரைத்தவர்கள் (அனுமதி கேட்காமலே வீடுகளில்) உட்கார்ந்து கொண்டார்கள் - அவர்களில் நிராகாத்தவர்களை வெகு விரைவில் நோவினை செய்யும் வேதனை வந்தடையும்.
14. Whether you slay or slain in Jihad, God has promised paradise for giving all in the cause of God…9:111 (113)
9:111 (நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களின் உயிர்களையும், பொருள்களையும் நிச்சயமாக அவர்களுக்கு சுவனம் இருக்கிறது என்ற (அடிப்படையில்) விலைக்கு வாங்கிக் கொண்டான் அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போடுவார்கள்
15. Fight the unbelievers surrounding you…9:122 (113)
9:123 நம்பிக்கை கொண்டவர்களே! உங்களை அடுத்திருக்கும் (தொல்லை விளைவிக்கும்) காஃபிர்களுடன் போர் பூயுங்கள்
மேற்கண்ட குரானின் வரிகளிலிருந்து நாம் தெரிந்து கொள்வது என்ன? குழப்பமாக இருக்கிறதா? இஸ்லாம் என்பது அமைதி, இஸ்லாம் என்பது சகிப்புத்தன்மை, இஸ்லாம் என்பது கருணை என்று முஸ்லீம்கள் சிறுபான்மையாக வாழும்போது பேசுவதெல்லாம் கேட்டு குழப்பம் வந்திருக்கும். நஸ்க் என்று சொல்லப்படும் நீக்கத்தில் இருக்கும் மிக எளிய விதியை புரிந்துகொண்டால் எந்த குழப்பமும் இருக்காது.
நஸ்க் என்னும் நீக்கத்துக்கான விதியில் என்ன சொல்கிறதென்றால், இரண்டு முரண்பட்ட வசனங்கள் இருந்தால், காலத்தால் பிந்தைய வசனம் காலத்தால் முந்தைய வசனத்தை நீக்குகிறது. ஆகையால், எது பிற்காலத்தில் சொல்லப்பட்டதோ அதுதான் குரானின் தற்போதைய போதனை.
குரான் ஹதிஸ் ஆகியவற்றில் அறிஞராக இருக்கும் டாக்டர். முஹம்மது முஹ்சின் கான் சொல்வதைக் கேட்போம்.
“ஆகவே முதலில் போர் புரிவது தடை செய்யப்பட்டது, பிறகு அது அனுமதிக்கப்பட்டது, அதன் பின்னர் அது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அல்லாவோடு வேறொருவரையும் கும்பிடும் எல்லோர் மீதும் போர் புரிய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது”
(Ref. Introduction section of the English translation of Sahih Bukhari by Dr. Muhammad Muhsin Khan, Medina Islamic University).
அதே பகுதியில் டாக்டர் எம். முஹ்சின் கான் தொடர்ந்து எழுதுகிறார்
“பிறகு அல்லா சுரா பாராத் (9) வெளிப்படுத்தினார். அதில் முஸ்லீம்கள் மற்றவர்களோடு வைத்திருந்த எல்லா ஒப்பந்தங்களையும் நிராகரித்து நீக்கிவிட்டார். விக்கிரக வழிப்பாட்டாளர்களும், வேதப்புத்தகம் அருளப்பட்டவர்களும் இஸ்லாமை தழுவவில்லை என்றால், அவர்களுக்கு எதிராக போர் புரிந்து தாங்கள் அடக்கப்பட்டவர்கள் என்று அவர்கள் உணர்ந்து ஜிஸியா வரி கட்டவைக்க வேண்டும்.(9:29) ஆகவே முஸ்லீம்களிடம் வலிமை இருக்கும்போதும், போரிட சக்தி இருக்கும்போதும், விக்கிரகவழிப்பாட்டாளர்கள், யூதர்கள் கிரிஸ்துவர்கள் ஆகியோருக்கு எதிரான போரை கைவிட்டுவிடுவது அனுமதிக்கப்படவில்லை.”
இட்கான் ஃபி உலும் இல் குரான் என்ற புத்தகத்தை 1497இல் ஜலாலுதீன் சுயுதி எழுதினார். இந்த புஇத்தகம் குரானுக்கு எழுதப்பட்ட தஃப்ஸீர் (விளக்கம்). இது மிகவும் மதிக்கப்படும் விளக்கம். குரானைப் படிக்க விரும்பும் அனைவரும் கட்டாயமாக படிக்க வேண்டிய புஇத்தகம் இது. அவரது இன்னொரு புத்தகம் இஸ்தென்பாத் அல்-தன்ஸீல். இந்த புஇத்தகத்தில் சுயுதி எழுதினார்
“குரானில் மன்னிப்பைப் பற்றி இருக்கும் அனைத்தையும் 9:5 வசனம் நீக்கம் (நஸ்க்) செய்கிறது”
உண்மையான இஸ்லாமைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் மேலே இருக்கும் வரியை மீண்டும் படியுங்கள். இந்த வசனத்தின் காலவரிசை எண் 113. ஞாபகம் இருக்கிறதா? குரானில் 114 சுராக்கள் இருக்கின்றன.
இஸ்லாமைப் பற்றி பிரச்சாரம் செய்பவர்கள் கீழ்க்கண்ட வரிகளை அடிக்கடி பேசி இஸ்லாமில் கருணை மன்னிப்பு ஆகிவை இருப்பதாகச் சொல்கிறார்கள்.
To you is your religion and to me is mine…109:6
உங்களுக்கு உங்களுடைய மார்க்கம் எனக்கு என்னுடைய மார்க்கம்.”
No compulsion in religion…2:256
மார்க்கத்தில் கட்டாயம் இல்லை
Turn away from those who join false gods with Allah…15:94
அல்லாவுடன் பொய்க்கடவுள்களை சேர்த்து வணங்குபவர்களை விட்டு விலகுங்கள்
துரதிர்ஷ்டவசமாக, குரானில் இருக்கும் “நல்ல” வசனங்கள் எல்லாமும், சுயுதி கூறுவது போல வாளின் வசனத்தால் (9:5) நீக்கம் செய்யப்பட்டுவிடுகின்றன.
காரென் ஆம்ஸ்ட்ராங் என்னும் எழுத்தாளரை இஸ்லாமிஸ்டுகள் போற்றுகிறார்கள். காரணம், ஜார்ஜ் புஷ் சொல்லும் “இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம்” என்ற அபத்த உளறலை பரப்பி முஸ்லீமல்லாதவர்களை ஏமாற்றுகிறார். இஸ்லாம் பற்றிய குறைந்த அறிவு உடையவர்கள் கூட காரென் ஆம்ஸ்ட்ராங்கின் எழுத்துக்களில் உண்மை கிஞ்சித்தேனும் இல்லை என்பதையும் ஊரை ஏமாற்றுகிறார் என்பதையும் கண்டுகொள்ளலாம். 2.190 வரியை எடுத்துக்கொண்டு தற்காப்புக்காக மட்டுமே முஸ்லீம்கள் போர் தொடுக்க முடியும் என்று கூறுகிறார்
“குரானில் பேசப்படும் போர் என்பது தற்காப்புக்காக செய்யப்படும் போர். முஸ்லீம்கள் எந்த விதமான போரையும் ஆரம்பித்துவைக்கக்கூடாது” என்று டைம் பத்திரிக்கை அக்டோ பர்1, 2001 இல் எழுதினார்.
மேலும், முகம்மது வலிமை பெற பெற, சர்வாதிகார போக்கும், சகிப்புத்தன்மை அற்ற போக்கும், குரூரமும் அதிகரித்துக்கொண்டே போவதை பார்க்கலாம்
நான்காம் பகுதியில் எவ்வாறு இஸ்லாம் தாருல் ஹராப் (முஸ்லீமல்லாதவர்களின் வீடு) மீது பகிரங்க போர் தொடுக்க குரான் ஆணையிடுகிறது என்பதை மூடி மறைத்து நேர்மையின்றி எழுதுகிறார். நான்காம் பகுதியின் ஜிகாத் போர், உலகத்தில் உள்ள எல்லோரும் இஸ்லாமுக்கு மதமாற்றம் செய்யப்படும் வரைக்கும் தொடர்ந்து நடக்கும். இது எல்லோருக்கும் ஒரே கட்டளைதான். அந்த முஸ்லீம்கள் இஸ்லாமிய சொர்க்கங்களான ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் பங்களாதேஷ், ஈரானாக இருந்தாலும் சரி அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா பிரான்ஸ் கனடாவாக இருந்தாலும் சரி.
அல் ஷவ்கானி என்ற புகழ்பெற்ற இஸ்லாமிய அறிஞரது புஇத்தகமான அல்சாய்லு ஜரார் (4:518-519)இலிருந்து ஒரு மேற்கோள். இந்த இஸ்லாமிய அறிஞரது எழுத்துக்கள் மிகவும் அதிகாரப்பூர்வமானவையாக கருதப்படுகின்றன. இவை ஜிகாதிகளால் தங்களது ஈவிரக்கமற்ற செயல்களை நியாயப்படுத்த உபயோகப்படுத்தப்படுகின்றன.
“முஸ்லீமல்லாதவர்கள் மீது போர் தொடுத்து அவர்களை கட்டாயமதமாற்றம் செய்து இஸ்லாமுக்கு கொண்டுவர வேண்டும் அல்லது அவர்களை அடக்குமுறைக்குக் கீழ் கொண்டுவந்து அவர்கள் ஜிஸியா வரி கொடுக்க வைக்க வேண்டும் அல்லது அவர்கள் கொல்லப்பட வேண்டும் என்பது இஸ்லாமின் மாற்ற முடியாத இறுதிக் கட்டளை. எப்படியாயினும், மன்னிப்பைப் பற்றிய எல்லா வசனங்களையும் ஜிகாத் போர் பற்றிய வசனங்கள் ஒருமனதாக நீக்கம் செய்துவிட்டன”
மேற்கண்ட அலீமின் (இஸ்லாமிய அறிஞரின்) வார்த்தைகளை சுதந்திர ஜனநாயக தேசங்கள்கொடுக்கும் பாதுகாப்பையும் வசதி வாய்ப்புக்களையும் செல்வத்தையும் அனுபவித்துக்கொண்டிருக்கும் காரென் ஆம்ஸ்ட்ராங்கோ அல்லது வேறு இஸ்லாமிஸ்டுகளோ மறுக்க முடியுமா?
9:5 வசனம் மிக முக்கியமான வசனம் என்பதை நாம் குறித்துக்கொள்ள வேண்டும். முதலாவது பகுதியான கருணை நிலையிலிருந்து, இஸ்லாமை நம்பாதவர்களை மன்னிப்பதின் பகுதிக்குச் சென்று, அவர்கள் மீது பகிரங்க ஆக்கிரமிப்பு செய்யும் 4 ஆம் பகுதிக்கு முஸ்லீம்களை மாற்றும் வசனம். முன்பே சொன்னது போல இந்த வசனத்தின் பெயரே வாளின் வசனம் என்பதுதான் (verse of the sword). இந்த வசனம் இதுவரை சொன்ன முஸ்லீமல்லாதவர்கள் மீது கருணை, சகிப்புத்தன்மை மன்னிப்பு சம்பந்தப்பட்ட அனைத்து வசனங்களையும் நீக்கம் செய்துவிடுகிறது.
மேலும் இந்த காலவரிசைப்படி வைக்கும் வரிகள் முகம்மதை ஒரு வன்முறையற்ற வழியிலிருந்து பாஸிஸ்ட் நாஸியான ஹிட்லர் முஸோலினி ஒஸாமா போன்று மாற்றுவதை கவனிக்கலாம். சொல்லப்போனால், முகம்மது 87க்கு முந்தைய வசனங்களை வைத்துப்பார்க்கும்போது முகம்மதுவை சாதாரண மனிதனாகவும் 87க்குப் பிறகு பாஸிஸ்ட் சர்வாதிகாரியாகவும் ஆவதை பார்க்கலாம்.
மேலும் உலகத்தில் உள்ள முஸ்லீம் அல்லாதவர்கள் மீது பகிரங்க போர் தொடுக்க கட்டளையிடும் வசனம் (நான்காம் பகுதி) ஏறத்தாழ குரானின் இறுதியில் வருவதை பார்க்கலாம். (காலவரிசை 113). குரானில் மொத்தம் 114 சுராக்கள்தான் இருக்கின்றன.
பொய் சொல்வது குரானில் அனுமதிக்கப்பட்டதா? இந்தக் கேள்வியைக் கேட்டால் என்ன அபத்தமான கேள்வி என்று நீங்கள் சொல்லலாம். எந்த மதம்தான் பொய் சொல்வதை அனுமதிக்கும்? இஸ்லாமிஸ்டுகள் சொல்வதை மட்டும் கேட்டால், பொய் சொல்வது மிகப்பெரிய பாவம் என்று இஸ்லாம் சொல்கிறது என்றுதான் நீங்கள் நினைப்பீர்கள். அது ஒரு பெரிய மாய்மாலம். இஸ்லாம் உலகை ஆள்வதற்காக முஸ்லீம்கள் பொய் சொல்வது அனுமதிக்கப்பட்ட விஷயம். நம்பக்கடினமாக உள்ளதா?
இமாம் கஜிலி என்ற முஸ்லீம்களால் போற்றப்படும் இஸ்லாமிய அறிஞர் கூறுவதை பார்ப்போம்
“பேச்சும் நமது குறிக்கோள்களை நிறைவேற்றிக்கொள்ளும் வழிதான். உண்மையையும் பொய்யையும் தேவைப்படும்போது பேசி காரியத்தை சாதித்துக்கொள்ளவேண்டும். தேவையில்லாமல் பொய் பேசுவது சட்டப்படி தவறு. குறிக்கோள் அடையவேண்டிய குறிக்கோளாக இஸ்லாம் காட்டும்போது அதற்காக பொய் சொல்வது தவறல்ல”(Ref: Ahmad Ibn Naqib al-Misri, The Reliance of the Traveller, translated by Nuh Ha Mim Keller , Amana publications, 1997, section
r8.2, page 745).
அல்-தக்கியா (al-Taqiyya ) என்று கூறும் முறையின் படி, இஸ்லாமுக்காக பொய் சொல்வது அனுமதிக்கப்பட்ட ஒன்று. வேண்டுமென்றால், மேற்கண்ட ஆங்கில வார்த்தையை போட்டு கூகுளில் தேடிப்பாருங்கள். இது பற்றிய விவரமான விவாதத்தை இங்கே பார்க்கலாம்.
Taqiyya and kitman - lying for the sake of Islam
தக்கியா என்ற பொய் பேசுவதை பற்றி பல்வேறு இஸ்லாமிய அறிஞர்கள் கூறிய ஆமோதிப்புகளை தொகுத்து அந்த இழை தருகிறது.
#
இதற்கு ஒரு சஹி புகார் ஹதீஸ் வேறு இருக்கிறது.
சஹி புகாரி (5:369)
காப்-பின்- அஷ்ரப் என்ற கவிஞர் தொடர்ந்து முகம்மதை கிண்டல் செய்துகொண்டே இருப்பதால், அந்த கவிஞரை கொலை செய்ய முகம்மது தன் ஆட்களை அழைத்தார்.
முகம்மது பின் மஸ்லாமா என்ற ஆள், “நான் செய்வேன். ஆனால், அந்த கவிஞர் தன் வீட்டை விட்டு வெளியே வர வைக்க பொய் சொல்லலாமா?” என்று கேட்டார். முகம்மது செய்யலாம் என்று கூறினார்.
#
இதுதான் இஸ்லாமிஸ்டுகள் தொடர்ந்து பொய் சொல்லிக்கொண்டே வருவதன் ரகசியம். உண்மையைச் சொன்னால் யார்தான் இஸ்லாமில் சேர்வார்கள்?
இஸ்லாம் பற்றி கேள்வி கேட்பவர்களும், சுதந்திர சிந்தனையாளர்களும் குரானின் குரூரமான வசனங்களை பற்றி பேசினால், அது ‘out of context’ அதை சரியான பின்புலத்தில் புரிந்து கொள்ள வேண்டும் என்று இஸ்லாமிஸ்டுகள் மறுப்பார்கள்.
சரியான பின்புலத்தில் புரிந்து கொள்ளத்தான் இந்த கட்டுரை. இதிலிருந்தே தெரியும், யார் உண்மையில் சரியான பின்புலத்திலிருந்து பேசுவது, யார் ‘out of context’ இல் பேசுவது என்பது.
###
Kasem writes from Sydney, Australia. Comments could be made by writing to abul88@hotmail.com
###
