இஸ்லாமை அறிந்து கொள்வோம்

December 16, 2005

உயிருக்கு உயிர், கண்ணுக்கு கண், மூக்குக்கு மூக்கு, காதுக்கு காது, பல்லுக்குப் பல் -5.45

உயிருக்கு உயிர், கண்ணுக்கு கண், மூக்குக்கு மூக்கு, காதுக்கு காது, பல்லுக்குப் பல் -5.45

ஆசீப் மீரான் என்பவர் கூறுகிறார்.

“ஆனால் நான் சொல்ல விரும்புகிறேன். சவுதியில் ‘காட்டுமிராண்டித்தனம்’ என்று நண்பர் திருமலை குறிப்பிடுவது அவர்கள் நாட்டு சட்டம். ‘கண்ணுக்குக் கண்’ என்பது கொடூரமான தண்டனையாகத்தான் எனக்கும் தோன்றுகிறது. ஆனால், அந்த நாட்டின் சட்டம் அதுவென்றால் அதைப்பற்றி நாம் என்ன சொல்ல முடியும்? ”

அது என்ன “அந்த நாட்டின் சட்டம்” ?

முதலில் சவூதி நாட்டின் சட்டம் என்று ஒன்றும் இல்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

அனைத்து சட்டங்களும் ஹதீஸ் மற்றும் குரானில் உள்ள சட்டங்களே.
The Kingdom of Saudi Arabia is a sovereign Arab Islamic state with Islam as its religion; God’s Book and the Sunnah of His Prophet, God’s prayers and peace be upon him, are its constitution
போய் எங்கு வேண்டுமானாலும் தேடிப்பாருங்கள்.

சவூதி அரேபியாவுக்கு என்று எழுதப்பட்ட அரசியல் சாசன புத்தகம் இல்லை. இந்தியாவில் written constitution என்று ஒன்று இருக்கிறது. அது போன்று சவூதி அரேபியாவில் சவூதி அரேபியாவுக்கு என்று எழுதப்பட்ட புத்தகம் இல்லை. அந்த புத்தகம் குரானும் ஹதீசும் மட்டுமே. சொல்லப்போனால், நவீன நாடுகளுக்கிடையே நாட்டுக்கென தனியாக எழுதப்பட்ட கான்ஸ்டிட்யூஷன் இல்லாத நாடு சவூதி அரேபியா மட்டுமே.

ஆகவே குரானில் சொல்லப்பட்ட இஸ்லாமிய சட்டங்களே அங்கு நிறைவேற்றப்படுகின்றன.

ஆசீப் மீரான் இங்கே கூறும்போது “கண்ணுக்குக் கண்” என்பது கொடூரமான தண்டனையாகத்தான் தோன்றுகிறது என்று கூறுவதன் மூலம் இஸ்லாமையும் குரானையும் சரியான முறையில் குற்றம் சாட்டுகிறார்.


5.45 குரான் கூறுகிறது.

‘உயிருக்கு உயிர், கண்ணுக்கு கண், மூக்குக்கு மூக்கு, காதுக்கு காது, பல்லுக்குப் பல் ஆகவும் காயங்களுக்கு(ச் சமமான காயங்களாகவும்) நிச்சயமாக பழி வாங்கப்படும்”

தமிழில்குரான்.காம் இணையத்தளத்திலிருந்து..

ஆசீப், குரான் குறிப்பிடும் தண்டனை கொடூரமான தண்டனை என்று உரக்க கூறுங்கள்.

முஸ்லீம்களிலிருந்தே இப்படிப்பட்ட எதிர்க்குரல் கேட்பது நிறைவானதாக இருக்கிறது.

#

5:38 கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்று, உரைக்கப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
5:39 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறுகன்னத்தையும் திருப்பிக்கொடு.






















Get free blog up and running in minutes with Blogsome
Theme designed by Hadley Wickham